Skip to main content

Posts

Showing posts from September, 2021

கடிதம் எழுதி வைத்து விட்டு நடிகை தற்கொலை!

  உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும் நடிகை ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சௌஜன்யா கன்னடப் படத்திலும் பணியாற்றியுள்ளார். இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் இருந்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தை பொலிசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும், கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் செப்டம்பர் 27, 28 மற்றும் 30ஆகிய மூன்று திகதிகள் எழுதப்பட்டுள்ளன. இதில் இருந்து சௌஜன்யா மூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக பொலிசார் கருதுகின்றனர்.

உற்சவங்கள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை- இரவு நேர ஊரடங்கு அமுல் : விசேட அறிவிப்பு வெளியானது!

  நாடு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட்டாலும் இரவு நேர ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி  முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமெனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது போக்குவரத்து சேவைகளின்போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமென்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

வெளிநாடுகளிலிருந்து வருபவர்களால் ஆபத்து – உபுல் ரோஹண அதிருப்தி

  வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் சமூகமயமாகுவது மிகவும் ஆபத்தானதாகும். இவ்வாறு இருக்கையில் அவ்வாறு வருகை தருபவர்கள் தொடர்பில் எந்த தகவலும் சுகாதார பிரிவினருக்கு பெற்றுகொடுக்காமை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவா் உபுல் ரோஹண தெரிவித்துள்ளாா். இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளாா். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தற்போது வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலாபயணிகள் நாட்டுக்கு வருகை தந்துகொண்டே இருக்கிறாா்கள். வெளிநாடுகளிலுள்ள தொழிலாளா்கள் மற்றும் சுற்றுலாபயணிகளை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் எந்த ஆட்சேபனையும் இல்லை.வெளிநாட்டிலிருக்கும் தொழிலாளா்களும் மீண்டும் நாட்டுக்கு திரும்பி வரவே நீண்ட காலமாக காத்திருக்கிறாா்கள். அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவது சிறந்த வேலைத்திட்டமாகும். அதுமாத்திரமல்லாமல் சுற்றுலா பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துகொண்டே இருக்கிறாா்கள். இருந்தபோதிலும் இந்த குழுவினா் நாட்டுக்கு நுழையும் போதும் அதன் பின்னரும் இடம்பெறும் செயற்பாடுகள் தொடர்பில் எங்களுக்...

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் அனைவரதும் விடுமுறைகள் ரத்து!

  இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான சுமார் 5500 பேருந்துகள் நாளை (01) முதல் இயங்கத் தயாராக உள்ளதாகவும் இ.போ.ச ஊழியர்களின் விடுமுறைகள் யாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார். அனைத்து இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்துறைப் பிரிவின் ஊழியர்கள் வேலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர்கள் அனைவரது விடுமுறை நாட்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களை பணிக்கு வருமாறு அனைத்து டிப்போ மேற்பார்வையாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார். மாகாணங்களுக்கு இடையேயான பேருந்துகளை இயக்குவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் கிங்ஸ்லி ரணவக்க கூறினார். கடும் போக்குவரத்து நெரிசல் இன்றி பாதுகாப்பாக பயணிக்கத் தேவையான எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று அவர் கூறினார்

மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

  மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் நாளை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

வெள்ளை சீனி இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி

  வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று (30) முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலவிய சூழலில் வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்களை தற்காலிகமாக இரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரதல்ல வீதியில் மூன்று வாகனங்கள் விபத்து – 6 பேர் காயம்

  நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்ட நுவரெலியா – அட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு வீதியில்  இன்று (வியாழக்கிழமை) காலை ஏற்பட்ட விபத்தொன்றில் 6 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி குடைசாய்ந்துள்ளது. குறித்த முச்சக்கரவண்டி தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இவ்விபத்தில் குடைசாய்ந்த வேனில் பயணித்த நால்வரும், முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வேனில் ஏற்பட்ட இயந்திர கோளாரே இந்த விபத்திற்கான காரணம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நானுஓயா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளை அதிகாரி அதிரடி கைது

  தொட்டலங்க எல்லே விளையாட்டு குழு தலைவரை கொலைச் செய்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி இராணுவ முகாமின் கட்டளையிடும் அதிகாரி லெப்ரினன் கேர்ணல் கொழும்பு வடக்கு குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளாா். நேற்று மாலை கைது செய்யப்பட்ட இவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்படுவதாகவும் இராணுவத்துடன் இணைந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

வடக்கில் 680 பாடசாலைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

  வட மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார். வட மாகாணத்தில் வெளி மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது; கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உட்பட்ட 680 பாடசாலைகள் உள்ளன. அவற்றை உடனடியாக ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாகாணத்தில் வெளி மாவட்டங்களிலிருந்து பயணிக்கும் ஆசிரியர்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்து சேவை ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. கல்வி அமைச்சரிடம் என்னால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய போக்குவரத்து அமைச்சருடன் பேசி அதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆசிரியர்கள் சுகாதார நடைமுறையின் கீழ் தம...

60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி!

  60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதற்கு தொற்று நோய் தொடர்பான தேசிய ஆலோசனைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “30 – 60 வயது பிரிவினருள் நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அத்துடன்,  புற்றுநோய், சிறுநீரக நோய், சீறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொண்டோர் என நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு மேலதிகமாக சுகாதார உத்தியோகத்தர்கள் உட்பட முன்கள பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. பைசர் தடுப்பூசியே இவ்வாறு வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

207 பேரின் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தம்

  இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய 207 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்த பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பரீட்சை முறைகேடு குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய பரீட்சார்த்திகளுக்கு பதிலாக வேறு ஒருவர் பரீட்சைக்கு தோற்றியது தொடர்பாக 6 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. மேலும், கையெழுத்து மாற்றம், விடைத்தாள், கையடக்க தொலைபேசிகளை தம்வசம் வைத்திருத்தல் மற்றும் ஒரே மாதிரியான விடைகள் போன்ற விடயங்கள் காரணமாக பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பரீட்சை முறைகேடுகள் தொடர்பாக, பரீட்சைத் திணைக்களத்திற்கு 4,174 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததுடன், அது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் 3,967 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பரீட்சார்த்திகளிடம் தனியான விசாரணை நடாத்தி மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் சனத் பூஜித நேற்று முன்தினம் (28) தெரிவித்தார். இதேவேளை, பெறுபேறு மீளாய்வு தொடர்பான விண்ணப்ப கோரிக்கை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

முந்திச்செல்ல முயன்ற இளைஞனை சரமாரியாக தாக்கிய இராணுவ உயர் அதிகாரி,

  கெஸ்பேவ பகுதியில் வைத்து இராணுவ உயர் அதிகாரி ஒருவர் 23 வயது இளைஞனை சரமாரியாக தாக்கியுள்ளார். இராணுவ அதிகாரியின் வாகனத்தை, குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் முந்திச்செல்ல முற்பட்ட போது, தடுத்து நிறுத்தி இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் அநாகரீகமாக நடந்துக்கொண்டதை பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டித்துள்ளனர். இந்த சம்பவத்தின் போது பதிவான காணொளியொன்று தற்போது வெளியாகியுள்ளது

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முதலாம் திகதி தளர்வு

  நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இந்த நிலையில், புதிய சுகாதார வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பான அறிவிப்பு

  தென்மாகாணத்தில் உள்ள 200இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை ஒக்டோபர் 15ஆம் திகதி மீள திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தென்மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் யாப்பா தெரிவித்துள்ளார். தென்மாகாணத்தில் 200இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 514 பாடசாலைகள் காணப்படுவதாகவும், தற்போது மேற்படி பாடசாலைகளில் கிருமி தொற்று நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதோடு, அதன் பின்னர் 15ஆம் திகதி வரை பாடசாலைகளை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார். இந்நிலையில் பாடசாலைகளை சுத்தம் செய்வதற்காக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இந்நடவடிக்கைகளுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாகாண சுகாதார அமைச்சின் ஊடாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சி.ஐ டியை விசாரிக்க தயாராகும் பொலிஸ் !

  ஊடக நிறுவனமொன்றின் செய்தியாசியர் உள்ளிட்ட ஊடகவியலாளர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவித்திருந்தும், குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் சிலர் இதற்கு எதிராக செயற்பட்டமை தொடர்பில் உடனடி விசாரணையை ஆரம்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். வெள்ளைப்பூண்டு விவகாரம் தொடர்பில் பேலியகொடை விசேட குற்ற விசாரணை பிரிவினரால் முன்னெடுத்துவரும் விசாரணைகளை குற்ற விசாரணை பிரிவுக்கு மாற்றி விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனாவின் அபாய நிலைமை தனிவதாக தகவல்!

  கொரோனா வைரஸ் பரவலின் வீரியமிக்க காலக் கட்டம் நிறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பிரதானி பேராசிரியர் சந்திம ஜீவந்தர இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெளியாகியுள்ள அமெரிக்க ஆய்வொன்றினை மேற்கோள்காட்டி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றின் மிக மோசமான நிலைமை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் 100 ரூபாவுக்கு அரிசி வழங்கப்படும் - அமைச்சர் பந்துல

  அரிசி விரைவில் இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் 100,000 மெற்றிக் தொன் அரிசி இறக்கு மதி செய்யப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அந்தத் தொகை கிடைத்த பின்னர் ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவுக்குக் குறைவாக நுகர்வோர் வாங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். நுகர்வோர் நியாயமான விலையில் அரிசியை வாங்க முடியா விட்டால், சந்தையில் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டால் அதில் தலையிட வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். அரிசியை இறக்குமதி செய்வது அல்லது நியாயமான விலையில் மக்களுக்கு வழங்குவது அரசின் பொறுப்பு என்றும் அது சரியாக செயற்பட்டால் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரிசி மாஃபியா பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோரை சுரண்டுவதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க இனி தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

7.8 இலட்சம் பெறுமதியான சிகரட்டுகளுடன் ஒருவர் கைது!

  கொழும்பு 12-பழைய சோனகத் தெருவில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12,000 வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் 43 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் 780,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

பேக்கரி உற்பத்தி பொருட்களுக்கான விலை அதிகரிப்பு?

  சந்தையில் கோதுமை மா பற்றாக்குறை காரணமாக பேக்கரி உற்பத்திகள் குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், சில கம்பனிகள் மாவை பதுக்கி வைத்துள்ளதாக குறித்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் அரசாங்கத்தின் தலையீடு இன்றி விலை அதிகரிப்புக்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் 87 ரூபாவுக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படும் நிலையில், சில இடங்களில் 107 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நிலையில் சில பகுதிகளில் உள்ள பேக்கரிகளின் உற்பத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டு. கிரான்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

  மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராண்குளம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மட்டக்களப்பு,களுதாவளை பகுதியை சேர்ந்த 27 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . கல்முனையில் இருந்து வந்த காரும் மட்டக்களப்பில் இருந்து சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இதன்போது உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. video  Facebook

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு- இராணுவத்தை கொண்டு பிரச்சினைக்கு தீர்வு

  பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இராணுவத்தை கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. எரிபொருள் கொண்டு செல்லும் லொறி சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை, அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண , இராணுவ வீரர்களை கொண்டு எரிபொருள்களை கொண்டுசெல்ல பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. 5 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இராணுவ வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீச்சு

  பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற்ற சர்வதேச உணவு கண்காட்சியில் ஜனாதிபதி நேற்று கலந்துகொண்டார். கூட்டத்தின் நடுவே அவர் நடந்துசென்றபோது அவர்மீது முட்டை வீசப்பட்டதாகவும் அதன்பின்னர் அங்கிருந்த மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பை பலப்படுத்தி குறித்த நபரை மடக்கி பிடித்தனர். இதேவேளை, முன்னதாக கடந்த ஜூனில் ஜனாதிபதியை ஒருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஜப்பான் தீர்மானம்

  கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது. தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானிய பிரதமர் யொஷிஹிடே சுகா அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதனால் அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் என குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜப்பானிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். ஓகஸ்ட் நடுப்பகுதியில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோதும், சமீபத்திய வாரங்களில் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகிதமானோர் தற்போது முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாவற்குழியில் வீடு புகுந்து தாக்குதல் – தந்தை மற்றும் இரு மகன்கள் காயம்!

  நாவற்குழி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்று வீடு புகுந்து வீட்டில் இருந்த தந்தை மற்றும் இரு மகன்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் , வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. நாவற்குழி ஜே / 294 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினில் நேற்று இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் , வீட்டின் ஜன்னல்கள் , கதவுகளை உடைத்து அட்டகாசம் புரிந்ததுடன் , வீட்டில் இருந்த தந்தை மற்றும் மகன்கள் இருவர் மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி  விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த தந்தை , இரு மகன்களையும் , அயலவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிப்பு

  கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன. எவ்வாறாயினும் குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கமைய, கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருந்த 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சரவை உறுதியளித்ததை போன்று அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலரை மத்திய வங்கி வழங்கினால், அதனை முழுமையாக ஒரு வாரத்திற்குள் விடுவிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் வெளியிட்ட மகிழ்ச்சியான தகவல்

  கொரோனா வைரஸ் பரவலின் வீரியமிக்க காலகட்டம் நிறைவடைந்து வருவதாக ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். அமெரிக்க ஆய்வொன்றின் அறிக்கையை மேற்கோள்காட்டி கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றின் மோசமான நிலைமை நிறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதன் ஊடாகவே கொரோனா பரவலை நிறைவுக்கு கொண்டுவர முடியுமெனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது அனைவரினதும் கடமையாகும், எனவே தனிப்பட்ட ரீதியாக ஒவ்வொருவரும் சிந்தித்து தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயமாகுமெனவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிருந்து இலங்கை வருவோருக்கான விசேட செய்தி!

  இலங்கைக்குள் நுழைய முன்னர், புறப்படும் நேரத்தில் பரிசோதனை முடிவு மறையாக இருந்தால் (தொற்றுக்குள்ளாகாத), விமான நிலையத்தில் மற்றொரு பிசிஆர் பரிசோதனை செய்ய தேவையில்லை என்றும் பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுக் கொண்ட பயணிகள் இலங்கையை வந்தடைந்த பின்னர் மேற்குறிப்பிட்ட நடைமுறை பின்பற்றப்படும் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் புறப்படும் நாட்டில் 72 மணித்தியாலங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் தொற்றுக்கு உள்ளாகாதவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படாமல் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ATM இயந்திரத்தை சோதனையிட்ட வங்கி அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  மின்னேரிய-மினிஹிரிகம பிரதேசத்தில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றின் ATM இயந்திரத்தை உடைத்து 10 மில்லியனுக்கும் அதிக தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த ATM இயந்திரம் தற்காலிகமாக செயலிழந்ததைத் தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் நேற்று (27) இயந்திரத்தை சோதனையிட்ட போதே இந்த சம்பவம் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

யாழில் பொலிஸாரை கத்தியால் குத்த முற்பட்ட குடிமகன்! பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்

  யாழ்ப்பாணம் – கோண்டாவிலில் மதுபோதையில் குடும்பஸ்தர் ஒருவர் பொலிஸாரை கத்தியால் குத்த முற்பட்டதையடுத்து பொலிஸார் தமது பாதுகாப்புக்காக கைத் துப்பாக்கியால் வெடி வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் செபஸ்தியார் ஆலயத்துக்கு அண்மையில் ஒருவர் மது அருந்திவிட்டு குடும்பத்தினருடன் முரண்படுள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப் பெற்றதையடுத்து அவ்விடத்துக்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சென்றுள்ளனர். இதன் போது குறித்த நபர் பொலிசாருடன் முரண்பட்டதோடு போலீசாரையும் கத்தியால் குத்த முற்பட்டுள்ளார் . இதன் போது பொலிஸார் தமது பாதுகாப்புக்காக தாம் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் வெடி வெடித்துள்ளனர். இதனால் குறித்த நபர் தப்பியோட முயற்சி செய்துள்ளார். எனினும் குழப்பம் விளைவித்த நபர் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை – ரணிலுக்கு அரசாங்கம் பதில்!

  நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்துள்ளார். தற்போது அமுலாக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்பட்ட பின்னர், எரிபொருள் கொள்வனவுக்கு தேவையான அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாக அண்மையில் நாடாளுமன்ற உறுப்பின் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியிருந்தார். இவ்வாறு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறதா? – வைத்திய நிபுணர் விளக்கம்

  தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒரு சிலர் கூறும் கருத்துக்களுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லை என விசேட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தால் இடம்பெற்ற ஊடகக் கலந்துரையாடலில், கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க இவ்வாறு தெரிவித்தார். விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத இவ்வாறான தவறான கருத்துக்களுக்கு ஏமாறாமல் புத்திசாதுரியமாக நடந்துகொள்வதன் மூலம் மக்களையும் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, வர்த்தக நோக்கத்துடன் பரப்பப்பட்டு வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாறாமல், இதுவரையில் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் உடனடியாக தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தந்தை செலுத்திய ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி மூன்று வயது குழந்தை பலி!

  புல் வெட்டிக் கொண்டிருந்த இயந்திரத்தில் சிக்கி 3 வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. பள்ளம, சேருகெலே பிரதேசத்தில் நேற்று (27) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது தந்தை புல் வெட்டிக் கொண்டிருந்த இடத்திற்கு வந்த குழந்தை குறித்த ட்ரக்டர் இயந்திரத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளது. பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அனர்த்தம் தொடர்பில் இயந்திரத்தை செலுத்திய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டின் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

  நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண்சரிவு தொடர்பான சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, நுவரெலியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. காலி மாவட்டத்தின் எம்பிலிப்பிட்டிய, நெலுவ பகுதிகளுக்கும் மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ, கொடபல பகுதிகளுக்கும் கேகாலை மாவட்டத்தில் ருவான்வெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேசங்களுக்கும் நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ காரேலே, இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட, களவானஎஹலியகொட, இரத்தினபுரி நிவித்திகல ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு தொடருமா? – புதிய தகவல் இதோ..

  நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதிக்குப் பின்னர் நீடிப்பதா இல்லையா என்பது குறித்தான இறுதித் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் எடுக்கப்படவுள்ளது. அமெரிக்காவிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர் கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது. நாடு திறக்கப்படுமாயின் புதிய சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி அரச அலுவலர்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் நேரம் காலை 9 மணியாகவும் ,தனியார்துறை ஊழியர்கள் சமூகமளிக்கும் நேரம் காலை 10 மணியாகவும் மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது. அதற்கமைய போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.அரச சேவையாளர்களுக்கான விசேட சுற்றறிக்கையொன்றினை பொதுநிர்வாக அமைச்சு நாளை வெளியிடவுள்ளது. நாடு திறக்கப்பட்டாலும் பொதுநிகழ்வுகள் மற்றும் திருமண நிகழ்வுகள் நடத்தப்பட உடனடி அனுமதி வழங்கப்படாது.பாடசாலைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

குழந்தை பிறக்கும்போதே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் - GMOA

  இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது. சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி வழங்கும்போது ஒருவருடைய அடையா ளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டை பயன்படுகிறது. எனவே, இலங்கையைப் பொறுத்தமட்டில் சிறுவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் செயற்பாடு நடைமுறையில் இல்லை. எனவே, தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளின்போது, அவர்களை அடையாளப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதனைக் கருத்திற்கொண்டு புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்கும்போது, அடையாள அட்டை இலக்கம் மற்றும் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.