Skip to main content

Posts

Showing posts with the label உலகம்

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!

  கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது: எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத...

பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இங்கிலாந்தில் முன்பதிவு நடைமுறை

  இங்கிலாந்தில் வசிக்கும் மக்கள், தங்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள முடியும் என சுகாதார தரப்பினர் அறிவித்துள்ளனர். தற்போது, இரண்டாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் ஆறு மாதங்கள் நிறைவடையும் வரை முன்பதிவு செய்ய முடியாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் தடுப்பூசி செலுத்தி ஐந்து மாதங்கள் கடந்த 50 வயதிற்கு மேற்பட்டவர்களும் அதிக ஆபத்துள்ளவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கு எதிரான பாதுகாப்பை நீடிக்க உதவும் வகையில், பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. மேலும் அதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் குளிர்காலத்தில் மக்களைப் பாதுகாக்க தடுப்பூசிகள் சிறந்த வழி என சுகாதார அமைச்சின் செயலாளர் சாஜித் ஜாவித் கூறியுள்ளார்.

பேஸ்புக் பெயர் மாறுகிறது - 28ஆம் திகதி வெளியாகிறது புதிய பெயர்!

  பேஸ்புக் நிறுவனம் அதன் பெயரை மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தகத்தை படிக்காதவர்கள் கூட பேஸ்புக் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஊடகவியலாளராக மாற்றிய பெருமையும், மாற்றி வரும் பெருமையும் பேஸ்புக் செயலிக்கு மட்டுமே உண்டு. உலகில் எந்த செயலி முடங்கினாலும் அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியாது. அதே நேரத்தில் ஒரு நொடி முடங்கினால் கூட பேஸ்புக் பயனர்கள் இந்த உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள். அந்த அளவிற்கு உடலோடு உடையாக இணைந்து விட்டது பேஸ்புக். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் தற்போது மெட்டாவர்ஸை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில், ஒக்டோபர் 28ஆம் திகதி வருடாந்த இணைப்பு மாநாட்டை நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பங்கேற்று, அது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க பேஸ்புக் பெயர் மாறுகிறதா… அல்லது நிறுவனத்தின் பெயர் மாறுகிறதா என்கிற பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், அதற்கான விடை அக்டோபர் 28இல் தெரியவரலாம். இ...

விண்வெளியில் ஆரம்பமான படப்பிடிப்பு

  ரஷ்யாவைச் சோ்ந்த திரைப்படக் குழுவினா் விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தி வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை பூமி திரும்பினா். நடிகை யூலியா பெரெசில்ட் மற்றும் திரை இயக்குநா் க்ளிம் ஷிபெங்கோ அடங்கிய அந்த இருநபா் குழு, விண்வெளி வீரா் ஓலெக் நோவிட்ஸ்கையுடன் ரஷியாவின் சோயுஸ் விண்வெளி ஓடம் மூலம் கஜகஸ்தானிலுள்ள சா்வதேச விண்வெளி மையத்தில் தரையிறங்கினா். கடந்த 5 ஆம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவா்கள், ‘சேலஞ்’ என்ற திரைப்படத்தை அங்கு படமாக்கினா். திரைப்படக் குழுவுடன் சென்ற மேலும் 7 விண்வெளி வீரா்கள், அங்கேயே தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனா். திரைப்படமொன்று உண்மையிலேயே விண்வெளியில் படமாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

மீண்டும் தடங்கல் - மன்னிப்பு கோரியது பேஸ்புக்

  பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப், மெசஞ்சர் செயலிகள் கடந்த திங்கட்கிழமை உலகளவில் முடங்கின. 6 மணி நேரத்துக்கு பின் இந்த முடக்கம் சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் ஒரே வாரத்தில் 2-வது முறையாக நேற்று முன்தினம் மீண்டும் சில இடங்களில் பேஸ்புக் வலைதள சேவைகளில் தடங்கல் ஏற்பட்டது. அதுகுறித்து பேஸ்புக் நிறுவனம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், எங்கள் செயலிகள், தயாரிப்புகளை பயன்படுத்துவதில் பயனாளர்கள் சிலருக்கு சிரமம் ஏற்பட்டதை அறிகிறோம். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக சேவையை இயல்புநிலைக்கு கொண்டுவர முயல்கிறோம். ஏற்பட்ட தடங்கலுக்கு மன்னிப்பு கோருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் – தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

  ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை சீர்குலைக்க எண்ண வேண்டாம் என தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கத்தார் தலைநகரான தோஹாவில் முதன் முறையாக நேற்று அமெரிக்க அதிகாரிகளுக்கும் தலிபான்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன்போதே, ஆப்கானில் தற்போதுள்ள ஆட்சியை சீர்குலைக்க நினைத்தால் அனைவருக்கும் பிரச்சினைதான் என தலிபான் வெளிவிவகார அமைச்சர் அமீர்கான் முத்தாக்கி தெரிவித்தார். மேலும் கொரொனா நோய்க்கு எதிராக ஆப்கான் மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா போன்ற நாடுகள் உதவ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதேவேளை, இரண்டாவது நாளாக இன்றும் தோஹாவில் அமெரிக்காவுடன் தாலிபன்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முகாம்களில் இருந்து கனடாவுக்கு தப்பி ஓட்டிய இலங்கை அகதிகள்!

  இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம். மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச பொலிஸாரிடம் சிக்கினராம். மாலைத்தீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்கா நாட்டின் வசம் உள்ளது. அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள முக...

சக்திவாய்ந்த பூகம்பம் - 20 பேர் பலி - 300 பேருக்கு காயம்

  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இன்று (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20பேர் பலியானார்கள், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பூகம்பம் 5.8 என்று ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. இந்த பூகம்பம் ஏற்பட்டபோது தலைநகர் இஸ்லாமாபாத் மட்டுமின்றி பல்வேறு நகரங்களையும் அதிரச் செய்தது, இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூரை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிர்பூர் நகரின் போலீஸ் டிஐஜி சர்தார் குல்பராஸ் கான் கூறுகையில், “இன்று ஏற்பட்ட பூகம்பத்தில் குறைந்தபட்சம் 20 பேர் பலியானார்கள் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்” எனத் தெரிவித்தார். பாகிஸ்தான் புவியியல் அமைப்பு கூறுகையில், “ பஞ்சாப் மாநிலத்தின் ஜீலம் நகரின் மலைப்பகுதி அருகே, பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 5.8 என ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளது பூகம்பம் ஏற்பட்ட உடன் மிர்பூரில் உள்ள வீடுகள், கடைகள்,...

Facebook, Whatsapp உள்ளிட்ட செயலிகள் மீண்டும் வழமைக்கு - நடந்தது என்ன?

  Facebook, Whatsapp மற்றும் Instagram உள்ளிட்ட செயலிகள் மீண்டும் வழமை நிலைமையினை அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த செயலிகள் சுமார் ஆறு மணிநேர செயலிழப்பிற்குப் பின்னர் மீண்டும் வழமை நிலையினை அடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான Facebook, Whatsapp மற்றும் Instagram உள்ளிட்ட செயலிகள் உலகளாவிய ரீதியில் நேற்று இரவு செயலிழந்தன. பிரதான சேவர் கட்டமைப்பில் ஏற்பட்ட கேளாறே, இந்த பிரச்சினைக்கான காரணம் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் சுமார் 10 தசம் 6 மில்லியன் பயனாளிகள் பிரச்சினையை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த செயலிகளை அணுகுவதில் ஏற்பட்ட சிறமத்திற்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இவ்வாறானதொரு நிலைமை முன்னதாக 2019 ஆம் ஆண்டில் பேஸ்புக் நிறுவனத்திற்கு ஏற்பட்டது. இருப்பினும், குறித்த செயலிகள் செயலிழப்பின் காரணமாக பேஸ்புக் நிறுவனம் இத...

மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு

  2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு 2 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நோர்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று (05) முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டறிந்ததற்காக 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு டேவிட் ஜூலியஸ் (David Julius), ஆர்டெம் பட்டபௌஷியன் (Ardem Patapoutian) ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம், அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு, பல்வேறு உடலியல் செயல்முறைகளில் அவற்றின் செயல்பாடுகளை தெளிவுபடுத்துவதுடன் நாள்பட்ட வலி உள...

ஜப்பானின் புதிய பிரதமருக்கு மஹிந்த வாழ்த்து!

  ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்

இலங்கை பயணிகளுக்கு தடை நீக்கம்?

  இலங்கை பயணிகளுக்கு கட்டார் அரசாங்கம் விதித்திருந்த தடையை நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 6 ஆம் திகதியில் இருந்து இலங்கை மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட சில நாட்டவர்கள் தமது நாட்டிற்குள் பிரவேசிக்கலாம் என கட்டார் அரசாங்கம் அறிவித்துள்ளது. 12 வயதிற்கு மேற்பட்ட முழுமையாகத் தடுப்பூசி ஏற்றியவர்கள் 2 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கட்டார் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது

மிகப்பெரிய அளவில் செல்வந்தர்கள், தலைவர்களின் நிதி ரகசியம் அம்பலம்

  உலகின் பணக்கார மற்றும் மிகவும் சக்திவாய்ந்த நபர்களின் இரகசிய ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்கள் மிகப்பெரிய அளவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. Pandora papers கிட்டத்தட்ட 12 மில்லியன் ஆவணங்களை இவ்வாறு வௌியிட்டுள்ளது. தற்போதைய மற்றும் முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச தலைவர்கள் உட்பட 35 உலகத் தலைவர்களின் இரகசிய விவகாரங்கள் இவ்வாறு அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள அரசாங்க அமைச்சர்கள், நீதிபதிகள், மேயர்கள் மற்றும் இராணுவ தளபதிகள் போன்ற 300 க்கும் மேற்பட்ட பிற பொது அதிகாரிகளின் இரகசிய நிதி குறித்தும் Pandora papers வௌிச்சம் போட்டு காட்டியுள்ளது.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜனாதிபதி அறிவிப்பு

  தனது பதவிக் காலம் முடிந்தவுடன் அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக பிலிப்பின்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடோ்தே அறிவித்துள்ளாா். இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தோ்தலில், துணை ஜனாதிபதி பதவிக்கு நான் போட்டியிடுவதை பொதுமக்கள் விரும்பவில்லை. இதுதொடா்பான கருத்துக் கணிப்புகள், சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துகள் மூலம் துணை ஜனாதிபதியாகும் தகுதி எனக்கில்லை என்பது தெரிய வருகிறது. மேலும், அவ்வாறு தோ்தலில் நான் போட்டியிடுவது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் பெரும்பாலானவா்கள் கருதுகின்றனா். எனவே, பொதுமக்களின் விருப்பத்திணங்க நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றாா் அவா். கடந்த 2016 ஆண்டு முதல் பிலிப்பின்ஸ் ஜனாதிபதியாகப் பொறுப்பு வகித்து வரும் ரோட்ரிகோ டுடோ்தே, பொதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையின்போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், அவரது அதிரடியான அரசியல் பாணி பல முறை சா்ச்சைக்குள்ளாகியுள்ளது. இந்தச் சூழலில், அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் ஜன...

கொரோனாவை தடுக்க அமெரிக்க நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை

  அமெரிக்காவைச் சேர்ந்த மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மாத்திரை கொரோனா வைரஸிற்கு எதிராக சிறப்பான செயல்திறனை கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து சந்தையில் அந்நிறுவன பங்குகளின் விலை அதிகரித்துள்ளது.   மெர்க் நிறுவனம் தயாரித்துள்ள மால்னுபிராவிர் மாத்திரையை உட்கொண்டால் கொரோனா தொற்று பாதிப்பால் மரணம் ஏற்படும் வாய்ப்பு பெருமளவு குறைவதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படக் கூடிய நிலை கூட பலருக்கு ஏற்படாது எனவும் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த முடிவுகள் மிகுந்த நம்பிக்கையை அளிப்பதாகவும், இது பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில் கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் அமெரிக்க மருத்துவத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். விரைவில் மெர்க் நிறுவனம் அமெரிக்காவில் இந்த மாத்திரையை அவசரகாலத்தில் பயன்படுத்த அனுமதி கோரி விண்ணபிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் கொரோனா தொற்று பாதிப்பை தடுக்க வாய்வழி உட்கொள்ளும் வகையிலான முதல் மருந்தாக மால்னுபிராவிர் மாத்திரை இருக்கும். மாத்திரையின் ஆய்வக முடிவுகள் நேர்மறையா...

முடிவுக்கு வந்தது வெளிநாட்டுப் பயணத் தடை!

  கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தங்கள் நாட்டவா்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை அவுஸ்திரேலியா அடுத்த மாதம் நீக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டுப் பிரதமா் ஸ்காட் மோரிசன் கூறியதாவது: கடந்த 18 மாதங்களாக பெரும்பாலான குடிமக்களும், நிரந்தர குடியேற்ற உரிமை பெற்றவா்களும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 16 வயதுக்கு மேற்பட்டவா்களில் 80 சதவீதத்தினா் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு இந்தத் தடை விலக்கிக் கொள்ளப்படும் என்றாா் அவா். இந்த இலக்கு அடுத்த மாதம் எட்டப்படும் என்பதால், வெளிநாட்டுப் பயணத் தடை நவம்பரில் ரத்து செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், வெளிநாட்டுப் பயணிகளை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதற்கான திகதி எதையும் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு- இராணுவத்தை கொண்டு பிரச்சினைக்கு தீர்வு

  பிரித்தானியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் இராணுவத்தை கொண்டு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. எரிபொருள் கொண்டு செல்லும் லொறி சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றை, அந்தந்த பகுதிகளுக்கு கொண்டு சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல பெட்ரோல் நிலையங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இந்த பிரச்னைக்கு தீர்வு காண , இராணுவ வீரர்களை கொண்டு எரிபொருள்களை கொண்டுசெல்ல பிரித்தானிய அரசு திட்டமிட்டுள்ளது. 5 நாட்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு இராணுவ வீரர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதி மீது முட்டை வீச்சு

  பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அவர் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸின் லியோன் நகரில் நடைபெற்ற சர்வதேச உணவு கண்காட்சியில் ஜனாதிபதி நேற்று கலந்துகொண்டார். கூட்டத்தின் நடுவே அவர் நடந்துசென்றபோது அவர்மீது முட்டை வீசப்பட்டதாகவும் அதன்பின்னர் அங்கிருந்த மெய்ப்பாதுகாவலர்கள் பாதுகாப்பை பலப்படுத்தி குறித்த நபரை மடக்கி பிடித்தனர். இதேவேளை, முன்னதாக கடந்த ஜூனில் ஜனாதிபதியை ஒருவர் எதிர்பாராத விதமாக கன்னத்தில் அறைந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஜப்பான் தீர்மானம்

  கொரோனா தொற்று காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு ஜப்பான் தீர்மானித்துள்ளது. தொற்றின் தாக்கம் குறைவடைந்து வருவதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானிய பிரதமர் யொஷிஹிடே சுகா அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்பதனால் அமுலில் இருந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் என குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் அமுலில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜப்பானிய பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். ஓகஸ்ட் நடுப்பகுதியில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தபோதும், சமீபத்திய வாரங்களில் அந்த எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் மக்கள் தொகையில் சுமார் 60 சதவிகிதமானோர் தற்போது முழுமையாக தடுப்பூசி செலுத்தியுள் நிலையில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.