வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி, இன்று (30) முதல் வெள்ளை சீனியை இறக்குமதி செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலவிய சூழலில் வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரங்களை தற்காலிகமாக இரத்துச்செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment