கொழும்பு 12-பழைய சோனகத் தெருவில் உள்ள வீடொன்றில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 12,000 வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது குறித்த சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டதாகக் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 43 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, குறித்த நபரிடமிருந்து மீட்கப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் 780,000 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments
Post a Comment