அரிசி விரைவில் இறக்குமதி செய்யப்படும் என்றும் அமைச்சரவையின் அனுமதியுடன் 100,000 மெற்றிக் தொன் அரிசி இறக்கு மதி செய்யப்படும் என்றும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அந்தத் தொகை கிடைத்த பின்னர் ஒரு கிலோ அரிசியை 100 ரூபாவுக்குக் குறைவாக நுகர்வோர் வாங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் நியாயமான விலையில் அரிசியை வாங்க முடியா விட்டால், சந்தையில் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டால் அதில் தலையிட வேண்டியிருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
அரிசியை இறக்குமதி செய்வது அல்லது நியாயமான விலையில் மக்களுக்கு வழங்குவது அரசின் பொறுப்பு என்றும் அது சரியாக செயற்பட்டால் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரிசி மாஃபியா பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நுகர்வோரை சுரண்டுவதை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க இனி தயாராக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment