Skip to main content

Posts

Showing posts with the label வவுனியா

நவராத்திரி பூஜைக்கு ஆலய குருக்கள் உள்ளிட்ட மூவருக்கே அனுமதி

  வவுனியாவில் உள்ள ஆலயங்களில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்கு ஆலய குருக்கள் உள்ளிட்ட மூவருக்கே அனுமதி வழங்கப்படும் என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்துக்களின் முக்கியமான விரதங்களில் ஒன்றாகிய நவராத்திரி உற்சவம் நாளை (07) ஆரம்பமாகின்றது. இந்நிலையில் கோவிட் பரம்பலை கருத்தில் கொண்டு ஆலயங்களில் நவராத்திரி பூஜை மேற்கொள்ள ஆலய குருக்களுக்கும், உபயகாரார் குடும்பத்தில் இருந்து இருவருக்கும் என மூவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். எனவே, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நவராத்திரி பூஜைகளை நடத்தவுள்ள ஆலய நிர்வாகத்தினர் உங்கள் பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகர்களிடம் அதற்கான அனுமதியைப் பெற்று, சுகாதார நடைமுறைகளுடன், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமைய நவராத்திரி உற்சவத்தை நடத்த முடியும் எனவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்

இளைஞன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

  வவுனியா - கூமாங்குளம் பகுதியில் இளைஞரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்போது கூமாங்குளம் பல்லவன் வீதியை சேர்ந்த 30 வயதுடைய சின்னையா ஜெசிந்தன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த இளைஞர் நேற்று இரவு கூமாங்குளத்தில் உள்ள தனது அம்மம்மாவின் வீட்டில் இரவு நித்திரைக்கு சென்றுள்ள நிலையில் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். எனினும் மரணத்திற்கான சரியான காரணம் இதுவரை அறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா பிரதேச செயலகத்தின் அதிரடி அறிவிப்பு

  கொவிட்  தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் மாத்திரமே வவுனியா பிரதேச செயலகத்திற்குள்  அனுமதிக்கப்பட்டு சேவைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என வவுனியா பிரதேச செயலகம் அறிவித்துள்ளது. குறித்த நடைமுறை இன்றைய (04) தினத்திலிருந்து நடைமுறைக்கு வரும். சேவை பெறுவதற்கு வருகை தருவோர் தடுப்பூசி அட்டையினையும், தேசிய அடையாள அட்டையினையும் தம்வசம் வைத்திருப்பது அவசியமாகும்.  குறைந்தது ஒரு தடுப்பூசியினையாவது பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளாமல் அட்டை இன்றி வருகை தருவோருக்கு நுழைவாயிலில் வைத்தே சேவை வழங்கப்படும் என்றும் வவுனியா பிரதேச செயலகம் மேலும் அறிவித்துள்ளது.

பட்டப்பகலில் வீடுடைத்து பணம் மற்றும் நகை திருட்டு

  வவுனியா, குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் வீட்டினை உடைத்து பெருமளவு பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று (01) இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, குடியிருப்பு பகுதியில் உள்ள தமது வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினர் தேவை நிமிர்த்தம் வீட்டில் இருந்து காலை வெளியேறிச் சென்றிருந்தனர். மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த போது வீட்டின் பிரதான கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டில் இருந்த அலுமாரிகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் மற்றும் நகைகள் என்பன திருடப்பட்டிருந்தன. இதன்போது அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 4 பவுண் நகை மற்றும் 3 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமான பணம் எனபனவற்றை திருடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் முமறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைது!

  வவுனியா, மடுகந்தைப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞனை மடுகந்தை பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 275 கிராம் கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞரையும், அவர் பயணம் செய்த மோட்டர் சைக்கிள் மற்றும் உடமையில் இருந்து மீட்கப்பட்ட கேரளா கஞ்சா என்பவற்றை விசேட அதிரடிப்படையினர் வவுனியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

வவுனியாவில் கொடூரம்: பெற்ற பிள்ளையை புதைத்த தாய்!

  வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். எனினும் பிறந்த குழந்தையை தான் வசிக்கும் காணியில் கிடங்கு வெட்டி புதைத்துள்ளார். கடந்த காலத்தில் தாயின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த தாய் தொடர்பில் சந்தேகம் கொண்ட ஒருவர் கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டது. இதன்போது குறித்த தாய் தான் பெற்ற குழந்தையை புதைத்தமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் தாய் தான் குழந்தையை பிரசவிக்கவில்லை என தெரிவித்த நிலையில் அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்த போது அவரே குழந்தையை பிரசவித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தாயாரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.