Skip to main content

குழந்தை பிறக்கும்போதே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் - GMOA

 


இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே தேசிய அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.


கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அந்தச் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும்போது ஒருவருடைய அடையா ளத்தை உறுதிப்படுத்த அடையாள அட்டை பயன்படுகிறது. எனவே, இலங்கையைப் பொறுத்தமட்டில் சிறுவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் செயற்பாடு நடைமுறையில் இல்லை.

எனவே, தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளின்போது, அவர்களை அடையாளப்படுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது.

இதனைக் கருத்திற்கொண்டு புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகளுக்கு அவர்களுக்கான பிறப்புச் சான்றிதழை வழங்கும்போது, அடையாள அட்டை இலக்கம் மற்றும் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

Comments