Skip to main content

Posts

Showing posts with the label இந்தியா

மகனை விடுவிக்க ஷாருக் கானிடம் 25 கோடி பேரம்!

  நடிகா் ஷாருக் கானின் மகனை விடுவிக்க அவரிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக’ சொகுசு கப்பலில் சோதனை நடைபெற்றபோது சாட்சியாகச் சென்ற நபா் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்கரைப் பகுதியில் சொகுசு கப்பலில் இருந்தபோது போதைப் பொருள் வைத்திருந்ததாக நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் உள்பட பலரை அக். 3-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா். தற்போது ஆா்யன் கான் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், சட்ட நடைமுறைகளின்படி சோதனை நடைபெறும் இடங்களுக்கு பொதுமக்களில் சிலா் கட்டாயம் அழைத்துச் செல்லப்படுவா் எனவும், அவா்கள் அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டனா் என்பதற்கு சாட்சிகளாக இருப்பா் என்றும் என்சிபி துணைத் தலைவா் ஞானேஷ்வா் சிங் அண்மையில் தெரிவித்திருந்தாா். அதன்படி, சொகுசு கப்பலில் சோதனை மேற்கொண்டபோது கொசாவி, மனீஷ் பானுஷாலி உள்பட 9 போ் சாட்சிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவா் கூறினாா். அந்த 9 பேரில் பிரபாகா் சைலும் ஒருவா். இவா் கொசாவியின் தனிப் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இவா் சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெ...

இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் திறந்துவைப்பு

  இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இருந்து முதலாவது விமானம் குஷிநகர் சர்வதேச விமான நிலைய சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அடுத்த நடிகை!

  ஓ மணப்பெண்ணே படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பிரியா பவானி ஷங்கர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக நாதியா சங் வெளியேறினார். கடந்த வாரம் உடல் நலக்குறைவு காரணமாக நமிதா மாரிமுத்து வெளியேறிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியா பவானி ஷங்கர் நுழைய விருப்பதாக தகவல் பரவிவருகிறது. ஆனால் அவர் போட்டியாளராக நுழையவில்லை. ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படத்தைப் விளம்பரப்படுத்தும் நோக்கில் அவர் செல்லவிருக்கிறார். அவருடன் ஹரிஷ் கல்யாணும் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நல்ல வெற்றியைப் பதிவு செய்த பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் பதிப்பான இந்தப் படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள...

பாம்பை கடிக்கவிட்டு மனைவி கொன்ற கணவனுக்கு தண்டனை!

  கேரள மாநிலம் கொல்லம் அருகே, பாம்பை கடிக்கவிட்டு 25 வயது பெண் இறந்த வழக்கில், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட அவரது கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கூடுதலாக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது திருமணத்துக்குத் தடையாக இருந்த மனைவி உத்ராவை பாம்பை கடிக்க வைத்துக் கொலை செய்த சூரஜ்ஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் கூடுதலாக 17 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து கொல்லம் கூடுதல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. நேரடியாக சாட்சிகள் ஏதுமின்றி, அறிவியல்பூர்வமான தடயங்கள் மற்றும் சூழ்நிலைகளை மட்டுமே ஆராய்ந்து, இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு என்று காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். சூரஜ் தரப்பில் கருணை கோரிய நிலையில், உத்ர பெற்றோர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் மரண தண்டனைக் கோரினார். குற்றவாளிக்கு எந்த கருணையும் காட்ட முடியாது என்று கூறிய நீதிபதிகள், இரட்டை ஆயுள் தண்டனை விதித்தனர். ஆனால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய உத்ராவின் பெற்றோர், இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்லவிரு...

நமிதாவுக்கு கொரோனா – பரவும் தகவல் – நடந்தது என்ன?

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா வெளியேறிய காரணத்தை அவரது தோழி பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நமிதா கடந்த வார நிகழ்ச்சியில் திருநங்கைகள் படும் கஷ்டங்களை மிக உணர்ச்சிகரமாக பேசினார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விஜய் டிவி பகிர்ந்த ப்ரமோவில் நமிதா இல்லை. அவர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்தது. ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நமிதா வெளியேற்றப்பட்டதாகவும், நமிதாவுக்கு கரோனா பரவல் காரணமாக வெளியேறிவிட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் நமிதா வெறியேறியது தொடர்பாக பேசிய அவரது தோழி, நமிதாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாமாக முன்வந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நமிதா பற்றி பரவும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சா் மகன் கைது - 11 மணி நேர விசாரணை!

  உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் நடந்த வன்முறை சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு ஆஜரான மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா். மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் ஆஜரான அவரை 11 மணி நேர விசாரணைக்குப் பின் போலீஸாா் கைது செய்தனா். லக்கீம்பூரில் உள்ள காவல் துறையின் குற்றப் பிரிவு அலுவலகத்தில் டிஐஜி உபேந்திர அகா்வால் தலைமையிலான எஸ்ஐடி குழு முன்பாக சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் ஆசிஷ் மிஸ்ரா ஆஜரானாா். அவரிடம் போலீஸாா் 11 மணி நேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவா் கைது செய்யப்பட்டதாக டிஐஜி உபேந்திர அகா்வால் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘ விசாரணைக்கு ஆசிஷ் மிஸ்ரா ஒத்துழைக்காததால் அவரை கைது செய்துள்ளோம். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தொடா்ந்து காவலில் எடுத்து விசாரிப்போம்’ என்றாா். ‘லக்கீம்பூா் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களை ஏன் கைது செய்யவில்லை’ என கடந்த வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், மாநில அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகவும் கூறியிருந்தது....

பிக்பாஸ் நிகழ்ச்சியில் யொஹானி!

  மெனிகே மகே ஹித்தே´ பாடல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் யொஹானி. குறித்த பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் இருந்து அழைப்பு வர இந்தியா சென்று ஹிந்தி பாடல் ஒன்றையும் அவர் பாடியுள்ளார். குறித்த பாடலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஹிந்தியில் ஔிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 15 இல் யொஹானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் சல்மான் கானுடன் இணைந்து யொஹானி மெனிகே மகே ஹித்தே பாடலை பாடும் டீசர் வௌியாகி உள்ளது. குறித்த நிகழ்ச்சி ஹிந்தி கலர்ஸ் டீவியில் இன்றிரவு 9.30 க்கு ஔிப்பரப்பாக உள்ளது

முகாம்களில் இருந்து கனடாவுக்கு தப்பி ஓட்டிய இலங்கை அகதிகள்!

  இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் இருந்து 64 போ் படகு மூலமாக, தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் செல்ல முயன்று மாலத்தீவு அருகே சா்வதேச பொலிஸாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து தமிழக கியூ பிரிவு பொலிஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தென் மாவட்டங்களில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம்களில் வசிக்கும் 64 போ் கடந்த செப்டம்பா் முதல் வாரத்தில் கேரளத்தில் ரூ.45 லட்சம் மதிப்பில் இந்தியப் பதிவு பெற்ற படகை விலைக்கு வாங்கி இலங்கைத் தமிழா் 20 பேரை ஏற்றிக் கொண்டு கனடாவில் தஞ்சம் புகத் திட்டமிட்டிருந்தனராம். மாலைத்தீவு மற்றும் மொரீஷியஸ் நாடுகளுக்கு இடையிலான கடற்பரப்பில் இவா்கள் சென்ற படகு மோசமான வானிலை காரணமாக, சா்வதேச பொலிஸாரிடம் சிக்கினராம். மாலைத்தீவு அருகே உள்ள டிக்கோ காா்சியா என்ற தீவு அமெரிக்கா நாட்டின் வசம் உள்ளது. அமெரிக்காவின் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் தீவில் அத்துமீறி இவா்களின் படகு நுழைந்ததாகக் கூறி அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. இதுவரை இந்தியத் தூதரகத்துக்கு இது குறித்து எந்தவிதமான தகவலும் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள முக...

அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயற்சித்த பெண்! என்ன தான் பிரச்சினை? முழுமையான விபரம்!

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தல அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.   அக்டோபர் 4ம் தேதி, 29 வயது நிறைவடைந்த பெண்மணி பர்ஜானா,  அஜித்தின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய வீட்டு வாசலில் நின்று தீக்குளிக்க முயற்சி செய்தார். மேலும்  அஜித்தை நேரடியாக  ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என்று முழங்கினார். தீக்குளிக்க  முயற்சி செய்து எரிபொருளை உடலின் மீது ஊற்றிய அந்த பெண்மணியை போலீசார் தடுத்தனர். மேலும் சில குடங்களில் நீரை எடுத்து வந்து அந்தப் பெண்மணியின் மீது ஊற்றி அந்தப் பெண்மணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவத்திற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும் என்று சில தகவல்கள் கிடைத்துள்ளன.  இந்தப் பெண்மணி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் அந்த மருத்துவமனையின் விதிகளை மீறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்...

இந்தியா இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமாகும்

  இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (04) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார். அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின் ஆரம்பத்தில் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்திய பிரதமர்​ நரேந்திர மோதி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஆகியோரது வாழ்த்துச் செய்திகளை பிரதமருக்கு முன்வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவை பலப்படுத்திக் கொள்ளும் நோக்கில் தற்போது செயற்பாட்டிலுள்ள திட்டங்கள் மற்றும் சுற்றுலாத்துறை, பௌத்த உறவினை மேம்படுத்தல் உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும் பல்வேறு துறைகள் தொடர்பில் இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. பௌத்த உறவை மேம்படுத்துவதற்கு இந்திய பிரதமர் மோதி அவர்கள் முன்னெடுத்த நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்தார். அது பிரதமர் மோதியின் முன்னுரிமையான பணியாக விளங்கியதாக ஷ்ரிங்லா நம்பிக்கை தெரிவித்தார். இந்திய - இலங்கை பிரதமர்களிடையே கடந்த ஆண்டு இடம்பெற்ற இணையவழி இருதரப்பு மாநாட்டின் இறுதியில் இரு நாட்டு மக்கள் இடையிலான ஆழமான உறவை பலப்படுத்தும் நோக...

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு வழங்கப்பட்ட தண்டனை

  மும்பையை சேர்ந்த 9 வயது சிறுமியின் பெற்றோர் கடந்த 2015-ம் ஆண்டு உறவினர்களை ரெயில் நிலையத்திற்கு வழியனுப்ப சென்றனர். இதனால் சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த 63 வயது முதியவரிடம் ஒப்படைத்து சென்றனர். ஆனால் முதியவர் தனியாக இருந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். யாரிடமும் தெரிவித்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டினார். ஆனால் சிறுமி நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் தெரிவித்தாள். இதன்படி பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து முதியவரை கைது செய்தனர். மேலும் மும்பை சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இறுதி கட்ட விசாரணை நிறைவடைந்த நிலையில் முதியவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நீதிபதி சஞ்சாஸ்ரீ காரட் முதியவருக்கு 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.

இந்திய வெளியுறவு செயலாளர் யாழ். விஜயம்

  இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (03) விஜயம் செய்ய உள்ளார். இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ளார். ​​இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். அதேபோல் இலங்கையின் வெளியுறவு செயலாளருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது

ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்: யாரை சொல்கிறார் சித்தார்த்?(படங்கள்)

  சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர் சித்தார்த் சற்று முன்னர் ’பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாறுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் இன்னொரு ட்வீட்டில் ’நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ன்னு எழுதி இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது’ என்று பதிவு செய்துள்ளார். நடிகர் சித்தார்த்தின் இந்த இரண்டு பதிவுகளும் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அவர் யாரை குறிப்பிட்டு இந்த பதிவு செய்துள்ளார் என்று பெரும்பாலான ரசிகர்கள் யூகித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள். நடிகர் சித்தார்த் யாரை குறிப்பிடுகிறார் என்று உங்களுக்கு புரிந்தால் நீங்களும் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்!

இசை நிகழ்ச்சியில் காயப்பட யோஹானி..

  இந்தியாவில் இறுதியாக இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது மெனிகே மகே ஹிதே பாடல் புகழ் யொஹானி தான் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார். இசை நிகழ்ச்சின் போது தனது தலையை தவறுதலாக கிட்டாரில் மோதிக் கொண்டதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எனினும் பாரதூரமான காயங்கள் எதுவம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வரலாறு காணாத அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

  பெட்ரோல் மற்றும் டீசல் விலை அக்டோபர் 2 சனிக்கிழமை அன்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. தேசிய தலைநகரில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 101.89 லிருந்து 25 பைசா உயர்ந்து 102.14 ரூபாயாகவும் டீசல் விலை 90.17 ரூபாயிலிருந்து 90.47 ரூபாயாக உயர்த்தப்பட்டது என இந்திய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது. மும்பையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து 108.19 ரூபாயாகாவும், டீசல் விலை 32 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு 98.16 ரூபாயாகவும் உள்ளது. நான்கு மெட்ரோ நகரங்களை பொறுத்தவரை, மும்பையிலேயே எரிபொருள் விலை அதிகமாக உள்ளது என்று அரசு நடத்தும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மதிப்பு கூட்டப்பட்ட வரி காரணமாக மாநிலங்கள் முழுவதும் எரிபொருள் விகிதங்கள் மாறுபடும். சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 99.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல், டீசல் 95.02 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் பெட்ரோல் லிட்டர் 100 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில்...

இன்று இலங்கை வருகிறார் இந்திய வெளிவிவகார செயலாளர்..!

  இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இன்று (சனிக்கிழமை) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். நாட்டிற்கு வருகைதரும் அவர் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை நாட்டில் இருந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பலரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இதன்போது சில இருதரப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் அவர் ஆரம்பித்துவைப்பார் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, இந்திய வெளிவிவகார செயலாளர் திருகோணமலை, யாழ்ப்பாணம், மலையகம் உள்ளிட்ட தமிழ் பிரதேசங்களுக்கும் பயணிக்கவுள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரின் விஜயம் முக்கியத்துவம் வாய்ந்தாக அமையவள்ளது. இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்பபம் இதுவாகும். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்ற நிலையில் இந்திய வௌிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ் ஆகியோர் சந்தித்து கலந்துரையாட...

கடிதம் எழுதி வைத்து விட்டு நடிகை தற்கொலை!

  உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும் நடிகை ஒருவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார். கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை மின்விசிறியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். சௌஜன்யா கன்னடப் படத்திலும் பணியாற்றியுள்ளார். இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது வீட்டில் இருந்து ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தை பொலிசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், உடல்நலக் குறைவாலும் சினிமா துறையில் தற்போதைய சூழல் காரணமாகவும், கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் செப்டம்பர் 27, 28 மற்றும் 30ஆகிய மூன்று திகதிகள் எழுதப்பட்டுள்ளன. இதில் இருந்து சௌஜன்யா மூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக பொலிசார் கருதுகின்றனர்.

இந்தியா – கனடா இடையே நேரடி விமான சேவை!

இந்தியா – கனடா இடையிலான நேரடி விமான சேவை இன்று(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றது. ஏப்ரலில் கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் தீவிரமடைந்திருந்த நிலையில், கனடா நேரடி விமான சேவைக்கு தடை விதித்திருந்தது. தற்போது நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துவருவதால், மீண்டும் விமானத்தை இயக்குவதற்கு கனடா அரசு அனுமதியளித்துள்ளது. இந்நிலையில் டெல்லி – டொரொன்டோ இடையே ஏர் இந்தியா, ஏர் கனடா விமானங்கள் இன்று முதல் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணத்திற்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என கனடா அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கரையை கடந்தது ’குலாப்’- இருவர் உயிரிழப்பு!

  வங்கக்கடலில் உருவான ‘குலாப்’ புயல் ஆந்திராவின் வடக்குப் பகுதி மற்றும் தெற்கு ஒடிசா இடையே நேற்றிரவு(ஞாயிற்றுக்கிழமை) கரையைக் கடந்தது. இதன்போது இருவர் உயிரிழந்துள்ளனர். மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரை விசாகப்பட்டினம் – கோபால்பூர் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அந்தப் புயலுக்கு ‘குலாப்’ எனப் பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் கரையைக் கடக்க தொடங்கிய குலாப் புயல், வடக்கு ஆந்திரம் மற்றும் தெற்கு ஒடிஸா கடலோரப் பகுதிகளுக்கு இடையே ஆந்திரத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கலிங்கப்பட்டினம் அருகே நேற்றிரவு கரையைக் கடந்தது. அப்போது கலிங்கப்பட்டினத்தில் 90 கி.மீ. வேகத்திலும், ஒடிசாவின் கோபால்பூா் பகுதியில் 30 கி.மீ. வேகத்திலும் பயங்கர காற்று வீசியது. அதன்பின்னர், புயல் ஒடிசாவின் கோராபுட் மாவட்ட கடல் பகுதிக்குள் நுழைந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள...

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருமாறு அழைத்து என்னை வேட்டையாட முயற்சிக்கிறார்கள்- மனுஷ நாணயக்கார

பாராளுமன்ற உறுப்பினர்கள் நாட்டில் காணப்படும் பிரச்சினை கள் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதை தடுத்து நிறுத்தும் நோக்கில் அவர்கள் வேட்டையாடப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்ற நடவடிக்கைகளுக்கு நேரடியான பங்களிப்பை வழங்கும் சந்தர்ப்பத்தை தடுக்க எக் காரணமும் கூறாது தன்னை குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு அழைத்துள்ளமை நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் கணினி தடயவியல் பிரிவு மேற்கொண்டு வரும் விசாரணை சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள டிஜிட்டல் தடயவியல் ஆய்வுக் கூடத்தின் பொறுப்பதிகாரியை சந்திப்பதற்காக குற்றவியல் விசாரணைத் திணைக் களத்தில் ஆஜராகுமாறு நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையம் ஊடாக எனக்கு அழைப்பு கிடைத்தது. யார் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, எந்தக் காரணத்திற்காக விசாரணைக்கான தகவல்களை என்னிடம் பெற எதிர்பார்க்கின்றனர் என்பது குறித்துக் கூறவில்லை. எவ்வித காரணங்களும் கூறாது குற்றவியல் விசாரணை திணைக் களத்திற்கு அழைத்தமை சிவில் பி...