Skip to main content

Posts

Showing posts from March, 2021

மனைவியை கழுத்தறுத்து கொன்று, சடலத்துடன் பெற்றோல் ஊற்றி எரிந்த கணவன்!

  தனது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்த கணவர், சடலத்தை வீட்டிற்குள் இழுத்து சென்று பெற்றோல் ஊற்றி எரித்தார். பின்னர் தனக்கும் பெற்றோல் ஊற்றி எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த கொடூர கம்பவளம் கம்பளை, அகுரமுல்ல பகுதியில் நேற்றிரவு நடந்தது. உயிரிழந்தவர்கள் கம்பளை, வட்டஹேன, அகுரமுல்லவில் வசிக்கும் சார்லஸ் ரணவீர மதநாயக்க (68) மற்றும் சந்தனி சில்வா (57) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நீண்ட காலமாக நிலவிய குடும்ப தகராறு காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கணவரும் மனைவியும் ஒரே காணியில் இரண்டு வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்தனர். கணவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். சில காலத்திற்கு முன்பு கம்பளை நீதிமன்றம் உத்தரவிட்டபடி, பராமரிப்பு தொகையாக ரூ.12,000 கணவனால் செலுத்தப்பட்டுள்ளதாக போலீசார் கூறுகின்றனர். இருப்பினும், அந்த தொகை போதாது, தொகையை அதிகரிக்க வேண்டுமென மனைவி பொலிசில் முறையிட்டுள்ளார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், அவர்களில் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். மற்ற மகள் திருமணமாகி அவர்களது வீட்டின் அருகே வசித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். நேற்று (24) தகராறு ஏற்பட்ட...

இலங்கை போக்குவரத்து சேவையினருக்கான அறிவித்தல்

  இலங்கை போக்குவரத்து சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 5 வருடங்களுக்கு அதிகமான அனுபவமுள்ள அனைத்து ஊழியர்களையும் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற போக்குவரத்து அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை, நீண்டகாலமாக நிலவிவரும் சாரதி ஆலோசகர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு எதிர்வரும் மே மாதத்தில் உரிய பரீட்சையை நடாத்தி இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் இங்கு தெரிவித்தார். நாடு பூராகவும் காணப்படும் உப டிப்போக்களை பஸ் தரிப்பிடங்களாக மட்டும் பயன்படுத்துவதற்கும், அவை தொடர்பான நிர்வாக நடவடிக்கைகளை பிரதான டிப்போக்கள் ஊடாக மேற்கொள்வதற்கும் அதன் மூலம் நாடு பூராகவும் பஸ் போக்குவரத்தை முறைமைப்படுத்தவும் வினைத்திறனான சேவையாக மாற்றுவதற்கும் அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். நகர்ப்புற வாகனங்களை கையாள்வது தொடர்பான முடிவுகளை எடுக்கும் உள்ளூராட்சி போக்குவரத்துக் குழுக் கூட்டங்களில் போக்குவரத்து அமைச்சை பிர...

பசறை விபத்தினால் நிர்கதியான குடும்பம்

  கடந்த 20 ஆம் திகதி லுணுகலவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று பசறை பகுதியில் வைத்து பல்லத்தில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளானதில் 14 பேர் உயிரிழந்திருந்ததுடன் 33 பேர் காயமடைந்திருந்தனர். அவர்களுக்கு ஒரு தம்பதியினரும் உள்ளடங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தம்பதியினரின் மூன்று குழந்தைகளும் பெற்றோரை இழந்து தற்போது நிர்கதியற்று இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பிள்ளைகளின் தந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்று கொண்டிருந்த சந்தர்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறித்த பிள்ளைகளின் பாட்டி தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த குடும்பத்தின் வருமானத்திற்காக வழி இல்லாமல் போயுள்ளதாகவும் குழந்தைகளை பராமரிப்பது கஷ்டமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைது!

  வவுனியா, மடுகந்தைப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் இருந்து ஹொரவப்பொத்தானை நோக்கி மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞனை மடுகந்தை பகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 275 கிராம் கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து கேரளா கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 28 வயதுடைய இளைஞரும் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞரையும், அவர் பயணம் செய்த மோட்டர் சைக்கிள் மற்றும் உடமையில் இருந்து மீட்கப்பட்ட கேரளா கஞ்சா என்பவற்றை விசேட அதிரடிப்படையினர் வவுனியா பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக சோயா எண்ணெய்!

  நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. உலகின் புதிய சந்தை மாற்றங்களுக்கு அமைவாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படவிருப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று (24) பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முசாமில் நேற்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். இணையத்தள மூலமாக வர்த்தக நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இணையத்தள வர்த்தகத்தில் ஈடுப்படுவோரை பாதுகாப்பதற்காக சட்டவிதிகள் இந்த திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. இதுவரையில் தற்போதைய இணையத்தள வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் முழுமைப்படுத்தப்படவில்லை. பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஒருவகை தேங்காய் எண்ணெய் சந்தைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து வர்த்தக அமைச்சு நுகர்வோர் அதிகார சபையின் ஊடாக நடவடிக்கை மேற்கொண்டுள்ளது....

நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

  தலவாக்கலை மேல் கொத்மலையில் நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர். பிரதேசவாசிகளினால் வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை சுமண சிங்கள வித்தியாலயத்திற்கு அருகிலே இவ்வாறு அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை இன்று (25) காலை பொலிஸார் மீட்டனர். சடலம் பிரேத பரிசோதனைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தடுப்பூசி ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தம்

  இந்தியாவில் உள்நாட்டில் தடுப்பூசி கேள்வி அதிகரித்துள்ளதால் ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா covid-19 தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை இந்தியா தற்காலிகமாக இடை நிறுத்தி உள்ளது. எவ்வாறாயினும் இலங்கைக்கு தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படும் என இந்தியா உறுதி அளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கைக்கு ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ரா செனகா covid-19 தடுப்பூசியில் 500,000 டோஸ்கள் எதிர்காலத்தில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று இராஜாங்க அமைச்சர் கூறினார்.

சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் – GMOA

  எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டைக் கொண்டாடும்போது மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தச் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர், நவீன் டி சொய்சா, பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால், கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரிக்கும் என குறிப்பிட்டுள்ளார். உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்காமல் மக்கள் தங்கள் வழக்கமான நடவடிக்கைகளைத் தொடர முடியாது என தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியைத் தக்க வைத்துக்கொள்ளவும் முகமூடி அணிவது மற்றும் கைகளைக் கழுவுவதை மக்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டுமென்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மக்கள் இந்த நடைமுறைகளைப் பின்பற்றினால், அது அவர்களின் குடும்பங்கள் மற்றும் நாட்டின் நல்வாழ்வுக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது புத்தாண்டுக்குப் பின்னர் கொரோனா பரவலைக் குறைக்க உதவும் எனவும அவர் மேலும் தெரிவித்...

அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன்

  வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். தேசிய பட்டியலில் ஒருவருடன் சேர்த்து ஐவர் இருக்கின்றனர். உண்மையிலேயே இந்த ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தத்தினை கொடுக்க வேண்டும். எங்களுடைய வடக்கு, கிழக்கிலே அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு அவர்கள் முன்வர வேண்டும். எங்களுடைய பாரம்பரியமான நிலங்களை அபகரிப்பதற்கு, அதேபோன்று எங்களுடைய மதஸ்தலங்களினுடைய அபகரிப்பு செய்வதனை நிறுத்திவிட்டு உண்மைய...

மேல் மாகாணத்தில் உள்ள கத்தோலிக்க பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியானது

  மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகளின் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த பாடசாலைகள் ஏப்ரல் 5ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டவுள்ளதாக தனியார் கத்தோலிக்க பாடசாலைகளின் பொது முகாமையாளர் அருட் தந்தை கெமுனு டயஸ் தெரிவித்துள்ளார். எனினும் தரம் 05, 11, மற்றும் 13 ஆம் வகுப்புகள் தவிர்ந்த ஏனைய அனைத்து வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகளே குறித்த தினத்தில் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். குறித்த பாடசாலைகளை எதிர்வரும் 29ஆம் திகதி, மீளத் திறப்பதற்கு முன்னதாக  தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கோரோனா தொற்று உறுதி

  யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரிடம் இன்று பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என்று யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை தெரிவித்தது. இதேவேளை, முதல்வரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த 20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டோரை அவதானமாக இருக்குமாறு யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோரியுள்ளார். யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கோரோனோ தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிகழ்வில் முதல்வரும் கலந்து கொண்ட நிலையில் இன்றைய தினம் முதல்வர் பி.சி.ஆர் பரிசோதனையை மேற்கொண்டுள்ளதுடன் தன்னை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார். அதேவேளை 20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டோர், தம்மை தனிப்படுத்தி கொள்ளுமாறும் முதல்வர் கோரியுள்ளார்.

புகைபிடித்தலை ஊக்குவித்தமை குறித்து அமைச்சர் விமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

  புகைபிடிப்பதை ஊக்குவிப்பதற்காக அமைச்சர் விமல் வீரவன்ச மீது, சட்டமா அதிபர் மற்றும் பொலிஸார் விசாரித்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது. அமைச்சர் வீரவன்ச, அண்மையில் ஆயுர்வேதக் கூறுகளுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இலவங்கப்பட்டை அடிப்படையிலான சிகரெட்டை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்டார். இந்நிலையில், வீரவன்சவால் ஊக்குவிக்கப்பட்ட இலவங்கப்பட்டை அடிப்படையிலான சிகரெட் வகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய ஆணையகம் (National Authority on Tobacco and Alcohol) எச்சரித்திருந்தது. சம்பந்தப்பட்ட அரச நிறுவனத்திடம் ஒப்புதல் பெறாமல், சிகரெட்டைச் சந்தைக்குக் கொண்டுவருவது சட்டத்தை மீறும் செயலென குறித்த ஆணையகத்தின் சட்டத் தலைவர் விராஜ் பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, இலவங்கப்பட்டை அடிப்படையிலான சிகரெட்டுக்கு அனுமதி வழங்கவில்லை என ஆயுர்வேத திணைக்களமும் சுகாதார அமைச்சும் புகையிலை மற்றும் மதுபானங்கள் தொடர்பான தேசிய ஆணையகத்துக்கு அறிவித்துள்ளன. இந்நிலையில், புகைபிடிப்பதை ஊக்குவிப்பதற்காக அமை...

யாழ். மாநகர சபையின் முதல்வர் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டார்!

  யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டதாக அறிவித்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் – நெல்லியடியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் கலந்துகொண்ட நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யட்டுள்ளது. குறித்த திருமண வைபத்தில் தானும் கலந்துகொண்டமையினால் தன்னை தானே சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அவர் அறித்துள்ளார். அத்தோடு, பி.சி.ஆர் பரிசோதனையும் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். எனவே குறித்த காலப்பகுதியில் தற்னோடு தொடர்புகொண்டவர்கள் அவதானமாக இருக்குமாறு வி.மணிவண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் காரணமாக இன்றைய தினம் இடம்பெறவிருந்த மாநகர சபை அமர்வுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்க அனுமதி

  மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் திறப்பதற்கு சுகாதார அமைச்சகம் கல்வி அமைச்சுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் பெரும்பாலான தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன. இந்த நிலையிலேயே மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் 5,11 மற்றும் 13 தரங்களின் கல்வி நடவடிக்கை கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து, ஏனைய தரங்களை எதிர்வரும் ஏப்ரல் 19ஆம்திகதி ஆரம்பிப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண் அகற்றும் இயந்திரம் குடை சாய்ந்து 22 வயது சாரதி ஸ்தலத்திலேயே பலி!

  கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை பொல்பிட்டிய விகாரைக்கு அண்மையில் சுமார் 200 மீற்றர் தொலைவில் உள்ள பகுதியில் மண் அகற்றும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குறித்த இயந்திரம் குடை சாய்ந்து அதன் சாரதி ஸ்தலத்திலேயே பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் இன்று (24) காலை சுமார் 7.00 மணியளவில் இடம் பெற்றுள்ளது. குறித்த பகுதியில் நிர்மானிக்கப்பட்டு வரும் அதிசக்தி வாய்ந்த மின் இணைப்பு பணிக்காக சென்று கொண்டிருக்கும் போது குறித்த மண் அகற்றும் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தடுப்பு கட்டை செயலிழந்துள்ளது. அதனால் குறித்த இயந்திரம் பின்னோக்கி இழுத்துச் செல்லும் போது சாரதி பாய்ந்துள்ளதாகவும் அவர் பாய்ந்த பக்கத்திலேயே இயந்திரம் குடை சாய்ந்ததில் அதில் அகப்பட்டு குறித்த நபர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் பதுளை ஹாலிஎல உடுவர பகுதியை சேர்ந்த யாப்பா முதியன்ஸலாகே சந்தருவான் மதுசங்க யாப்பா (22) என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரின் சடலம் கித்துல்கல தெலிகம வைத்தியசாலையில் பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்...

7 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 73 வயது தாத்தாவிற்கு விளக்கமறியல்!

  தனது 07 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 73 வயது முதியவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். காலி நீதிவான் ஹர்ஷன கெகுனவல முன்னிலையில் சந்தேகநபர் முற்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குழந்தையின் தந்தை தற்போது வெளிநாட்டில் வேலை செய்கிறார் என்று பொலிசார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். குழந்தையும் அவரது தாயும் கணவரின் தந்தை மற்றும் உடன்பிறப்புகளுடன் வசித்து வந்தனர். குழந்தையின் வாக்குமூலம், குழந்தையின் மருத்துவ பரிசோதனை குறித்து கராபிட்டி மருத்துவமனையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி வழங்கிய அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய சாரதி அனுமதி பத்திரத்திரத்தை அறிமுகப்படுத்த திட்டம்

  நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் பஸ் விபத்துக்கள் காரணமாக புதிய சாரதி அனுமதி பத்திரம் ஒன்று அறிமுகம் செய்யப்படும் என ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இனிவரும் காலங்களில் கனரக சாரதிகளுக்கான அனுமதி பத்திரம் கொண்டவர்களுக்கு பயணிகள் பஸ் செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டதினால் மாத்திரம் பயணிகள் போக்குவரத்து பஸ்களை செலுத்த முடியாது என்றும் ராஜாங்க அமைச்சர் கூறினார். இதனால் பொது போக்குவரத்து சாரதிகள் அனுமதி பத்திரம் அறிமுகம் செய்யப்படும். அந்த சாரதிக்கு இரண்டு வாரங்களுக்கு விசேட பயறிசி வழங்கப்படவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டர். (அரசாங்க தகவல் திணைக்களம்)

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பாடசாலை மாணவனுக்கு நீதி கோரி போராட்டம்!

  மன்னார் – தலைமன்னாரில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மாணவனுக்கு நீதி கோரி இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை 7.45 மணியளவில் தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு முன்பாக குறித்த போராட்டம் ஆரம்பமானது. பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சர்வமத தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலைமன்னார் பியர் பகுதியில் உள்ள ரயில் கடவை வரை பதாதைகளை ஏந்தியும் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு சென்றனர். இதன்போது போராட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சென்ற மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மேல், மன்னார் பிரதேச செயலாளர், ரயில்வே திணைக்கள அதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களோடு கலந்துரையாடினர். இந்த நிலையில், குறித்த ரயில் கடவைக்கான தடையினை புதிதாக அமைத்து, அதற்கான பாதுகாப்பு ஊழியரை புதிதாக நியமிக்குமாறு அவர்களிடம் போராட்டக்காரர்கள் கோரிக்க...

பெற்றுக்கொள்ளும் இரு தடுப்பூசிகளும் ஒரே வகையாக இருக்க வேண்டும் – அரசாங்கம்

  நாட்டில் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசி வகையினையே இரண்டாவது முறையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏனெனில் வெவ்வேறு தடுப்பூசிகளின் செயற்பாடுகள் வெவ்வேறு வழிகளில் செயற்படுவதாக கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் ஒருவர் முதலாவதாக பெற்றுக்கொண்ட தடுப்பூசியையே அவர்களுக்கு இரண்டாவது முறையாகவும் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசியின் முதல் டோஸ் வைரஸின் பரவலை 64% கட்டுப்படுத்துகின்ற நிலையில் இரண்டாவது டோஸ் 10 முதல் 12 வாரங்களுக்குப் பிறகு வழங்கப்படுகிறது என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் ஜனவரி 29 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக்கொண்டவர்களுக்கு ஏப்ரல் 29 ஆம் திகதி இரண்டாவது டோஸை வழங்குவதற்குரிய தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், தடுப்பூசியின் முதல் அளவைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான உரிய திகதியை அதிகாரிகள் அறிவிக்கும்போது அதனைத் தவற...

தலைமன்னாரிலிருந்து தனுஸ்கோடி வரை நீந்திச் சென்று உலகளவில் சாதனை படைத்த 48 வயதுப் பெண்

  தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சென்று தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான பெண் ஆசிரியர் சாதனை படைத்துள்ளார். தலைமன்னாரில் இருந்து நேற்று (19) அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீச்சல் ஆரம்பமாகி நேற்று (19) மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். தமிழகத்தையும், இலங்கையையும் பாக் ஜலசந்தி கடற்பகுதி பிரிக்கிறது. ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக்ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது. பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார். வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்தி வந்து, மீண்டும் தலைமன்னாரு...

குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டார் பிரியங்க பெர்னாண்டோ

  பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்ணாண்டா, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய மேல் நீதிமன்றம், அவரை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்துள்ளதாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்களினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக, சைகை ஊடாக பிரியங்க பெர்னாண்டோ அச்சுறுத்தல் விடுத்ததாக, அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இத்தகைய நிலையிலேயே தற்போது பிரித்தானிய மேல் நீதிமன்றம், அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிப்பதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு நோக்கி சென்ற பஸ் பஸ்ஸர பகுதியில் விபத்து. 13 பேர் பலி.

  பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30ற்கும் மேற்பட்டோர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 20.03.2021 அன்று காலை 6.55 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பசறை லுணுகலை பகுதியிலிருந்து கொழும்பு பகுதிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு பயணித்த தனியார் பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ் வீதியை விட்டு விலகி சுமார் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. விபத்தில் பஸ் சாரதி உட்பட 30ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், பசறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் பதுளை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டா...

கூரிய ஆயுதத்தால் பெண் கொலை: தாயும் மகளும் கைது- நுவரெலியாவில் சம்பவம்!

  நுவரெலியாவின் திம்புள்ள-பத்தன பகுதியில் தாயும் மகளும் இணைந்து பெண்ணொருவரை கொலைசெய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. கணவனுக்கு இருந்த இரண்டாவது மனைவியையே, முதலாவது மனைவி அவரது மகளுடன் இணைந்து கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், திம்புள்ள-பத்தனை பொலிஸ் பிரிவின் கிறேக்கிலி தோட்டம் பொரஸ்கிரிஸ் பிரிவைச் சேர்ந்த விஸ்வநாதம்மா (வயது-42) என்பவரே உயிரிழந்துள்ளார். கணவரை விட்டு முதலாவது மனைவி பிரிந்த நிலையில், கணவர், இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், நீண்ட காலத்தின் பின்னர், முதலாவது மனைவி கணவர் வீட்டுக்கு மீண்டும் சென்றநிலையில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். அத்துடன், குறித்த குடும்பத்தில் மனைவிமார்களுக்கு இடையில் மிக நீண்ட நாட்களாக சண்டை, சச்சரவு இருந்து வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலையை அடுத்து, முதலாவது மனைவி மற்றும் மகள் ஆகியோர் அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் தப...

வட்டுக்கோட்டையில் புதிய தபாலகம் திறந்து வைக்கப்பட்டது!

  புதிதாக அமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை அஞ்சல் அலுவலகம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. 11.6 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த அஞ்சல் அலுவலகமானது அஞ்சல்துறை அபிவிருத்தி ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி மதுமதி வசந்தகுமார் தலைமையில் இடம்பெற்ற குறித்த அஞ்சல் அலுவலக திறப்பு நிகழ்வில் அஞ்சல் துறை அமைச்சர் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு அஞ்சல் அலுவலகத்தை   திறந்து வைத்தார். குறித்த நிகழ்வில், ஊடகம்,தபால்த்துறை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஜெகவீர நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன்  மற்றும் வடக்கு மாகாண தபால் திணைக்கள உத்தியோகத்தர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அம்பாறையில் ஊருக்குள் புகுந்த யானைப்படை!

  நூற்றுக்கும் அதிகமான யானை கூட்டம் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கப்பட்ட தீ காரணமாக மக்கள் குடியிருப்புகளை நோக்கி நடமாடுவதனால் அவற்றை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் வியாழக்கிழமை (18) மாலை திடிரென சம்மாந்துறை ஊடாக காரைதீவு, மாவடிப்பள்ளி, நிந்தவூர் பகுதிகளை ஊடறுத்து ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் நூற்றும் அதிகமான யானைகளை கட்டுப்படுத்தி அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மாலை முதல் இரவு வரை யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரு இடத்தில் கூடி நிற்கின்றமை மற்றும் கலவரப்பட்டமை தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பொதுமக்களால் தகவல் தெரிவிக்கப்பட்டது. யானைகளை அவ்விடத்தில் இருந்து அகற்றுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக யானைக்கூட்டத்தின் நகர்வுகளை அவதானித்து நடவடிக்கை எடுத்திருந்தனர்  இதனால் யானைக்கூட்டத்தை பார்வையிட மாவடிப்பள்ளி பாலம், காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை பகுதிகளில் பொதுமக்கள் குவிந்து நின்றதை அவதானிப்பதை காண முடிகிறது. யானை கூட்டத்தினை பார்வையிட வரும் மக்களால் போ...

பங்களாதேஷ்க்கு விஜயம் மேற்கொண்டார் பிரதமர்

  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பங்களாதேஷ்க்கு இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டார். பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயத்தினை பிரதமர் இன்று மேற்கொண்டுள்ளார். பங்களாதேஷில் நடைபெறவுள்ள சுதந்திர தினம் மற்றும் பங்கபந்து செய்க் முஜ்பர் ரஹ்மானின் 100 ஆவது பிறந்த தினம் ஆகிய நிகழ்வில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார். இதேவேளை பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனா, பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹமட் அப்துல் அமீன், வெளிவிவார அமைச்சர், பங்களாதேஷ் வங்கி ஆளுநர் ஆகியோரை சந்திந்து  இருதரப்பு  பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இருநாடுகளுக்கு இடையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் ஊடாக வரலாற்று ரீதியிலான தொடர்பு மேலும் வலுவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதேவேளை அந்நாட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

  நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. நேற்றுமுந்தினம் (புதன்கிழமை) மாத்திரம் 9 ஆயிரத்து 657 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி முதல் நேற்று முந்தினம் வரையான காலப்பகுதியில் நாட்டில் 8 இலட்சத்து 6ஆயிரத்து 449 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, கொரோனா அபாயப்பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

பேருந்தில் பயணித்த முதியவர் திடீர் மரணம்

  மன்னாரில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்தில் பயணம் மேற்கொண்ட முதியவர் ஒருவர், திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணியளவில், மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்தில், குறித்த முதியவரும் பயணித்துள்ளார். இதன்போது, மன்னார் பிரதான பாலத்தடியிலுள்ள இராணுவ சோதனைச்சாவடியில் பேருந்து நிறுத்தப்பட்டு, சோதனைக்கு  உட்படுத்தப்பட்டது. அவ்வேளையிலேயே, குறித்த முதியவர் பேருந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து குறித்த முதியவரின் சடலத்தை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பாதுகாப்பு பிரிவினர் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் உயிரிழந்தவர் தொடர்பாக இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கொடூரம்: பெற்ற பிள்ளையை புதைத்த தாய்!

  வவுனியா பம்பைமடுவில் தான் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை ஒன்றை பெற்றுள்ளார். எனினும் பிறந்த குழந்தையை தான் வசிக்கும் காணியில் கிடங்கு வெட்டி புதைத்துள்ளார். கடந்த காலத்தில் தாயின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த தாய் தொடர்பில் சந்தேகம் கொண்ட ஒருவர் கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டது. இதன்போது குறித்த தாய் தான் பெற்ற குழந்தையை புதைத்தமை தெரியவந்துள்ளது. இந்நிலையில் தாய் தான் குழந்தையை பிரசவிக்கவில்லை என தெரிவித்த நிலையில் அவரை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்த போது அவரே குழந்தையை பிரசவித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தாயாரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் நாடு திரும்பினால் தனிமைப்படுத்தல் இல்லை – சுகாதார அமைச்சு

  வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு அனுமதி வழங்குவதற்கான திட்டம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் அவர் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார். வீட்டில் தனிமைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு, தனிமைப்படுத்தல் செயன்முறைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் அதற்குரிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார். இதற்கிடையில், இரண்டு முறை தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களும் இரு வாரங்கள் தனிமைப்படுதலை நிறைவு செய்தவர்களும் விரைவில் இலங்கைக்கு வருகைதரமுடியும் என இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்களை இலங்கைக்கு வந்ததும் பி.சி.ஆர் சோதனைகளை அடுத்து வீட்டிற்குச் செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொலிஸாரின் தாக்குதலைக் கண்டித்தும் நீதி கோரியும் வட்டக்கச்சியில் கதவடைப்பு!

  கிளிநொச்சி, வட்டக்கச்சிப் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் கொலையைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் அவரது குடும்ப உறுப்பினர்கள்மீது தரும்புரம் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப் படுகிறது. வட்டக்கச்சி பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) முழு கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் பொதுச் சந்தை மற்றும் வர்த்தக நிலையங்களை மூடி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கிளிநொச்சியில் வட்டக்கச்சிப் பகுதியில் கடந்த பத்தாம் திகதி இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் அருளம்பலம் துஷ்யந்தன் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், கத்தியால் குத்திய நபரின் வீட்டிற்குத் தீ வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, கடந்த 15 ஆம் திகதி காலை பத்து மணியளவில் சந்தேகநபர்களின் வீட்டில் சில பொருட்களை எடுத்துச் செல்வதற்கு, அவரின் உறவினர்கள் பொலிஸாரின் பாதுகாப்புடன் சென்றிருந்தனர். இந்நிலையில், இறந்தவரின் மனைவி மற்றும் சகோதரிகள் உட்பட கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து இறந்தவருக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்து பொலிஸாருட...