Skip to main content

Posts

Showing posts from October, 2021

அதிவேக நெடுஞ்சாலைகளில் ETC முற்கொடுப்பனவு அட்டை!

  அதிவேக நெடுஞ்சாலை கட்டணங்களுக்கான மின்னணு கட்டணத் திட்ட (ETC) முற்கொடுப்பனவு அட்டைகளை வாகன உமிழ்வு சோதனை நிலையங்களில் விநியோகிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ஆர். டபிள்யு. ஆர். பிரேமசிரிக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார். மின்னணு கட்டண முறை தற்போது கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சசாலையில் மட்டுமே பயன்படுத்தப்படுவதால், ETC முற்கொடுப்பனவு அட்டைகள் தற்போது சீதுவ, ஜா-எல மற்றும் களனி ஹொரன சந்தியில் உள்ள நெடுஞ்சாலை அலுவலகங்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. எதிர்காலத்தில், கெரவலப்பிட்டி உள்ளக பரிமாற்றம் மற்றும் ஏனைய நெடுஞ்சாலைகளில் உள்ள உள்ளக பரிமாற்றங்களில் மின்னணு கட்டண முறைகள் (ETC) நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாகன உமிழ்வு சோதனை நிலையங்களில் முற்கொடுப்பனவு அட்டைகளை எளிதாகப் பெற முடியும் என்றும் அமைச்சர் கூறினார். தினமும் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்துவோர் மத்தியில் மின்னணு கட்டண ETC முற்கொடுப்பனவு அட்டைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் நெடுஞ்சாலைகளில் வெளியேறும்...

மகனை விடுவிக்க ஷாருக் கானிடம் 25 கோடி பேரம்!

  நடிகா் ஷாருக் கானின் மகனை விடுவிக்க அவரிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக’ சொகுசு கப்பலில் சோதனை நடைபெற்றபோது சாட்சியாகச் சென்ற நபா் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்கரைப் பகுதியில் சொகுசு கப்பலில் இருந்தபோது போதைப் பொருள் வைத்திருந்ததாக நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் உள்பட பலரை அக். 3-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா். தற்போது ஆா்யன் கான் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், சட்ட நடைமுறைகளின்படி சோதனை நடைபெறும் இடங்களுக்கு பொதுமக்களில் சிலா் கட்டாயம் அழைத்துச் செல்லப்படுவா் எனவும், அவா்கள் அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டனா் என்பதற்கு சாட்சிகளாக இருப்பா் என்றும் என்சிபி துணைத் தலைவா் ஞானேஷ்வா் சிங் அண்மையில் தெரிவித்திருந்தாா். அதன்படி, சொகுசு கப்பலில் சோதனை மேற்கொண்டபோது கொசாவி, மனீஷ் பானுஷாலி உள்பட 9 போ் சாட்சிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவா் கூறினாா். அந்த 9 பேரில் பிரபாகா் சைலும் ஒருவா். இவா் கொசாவியின் தனிப் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இவா் சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெ...

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு

  கடலில் காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்ட, குறித்த நான்கு கடற்றொழிலாளர்களும் அந்தமான் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்ககொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஏழு நாட்கள் கடலில் மீன்பிடிக்கும் ஏற்பாடுகளுடன் நான்கு கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர். எனினும் திட்டமிட்டபடி குறித்த கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், சம்மந்தப்பட்ட உறவினர்களினால் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இவ்விடயத்தில் கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை மீண்டும் ஆரம்பம்

  கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் விநியோக சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், ஒரு நாள் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கு, முன்கூட்டியே அதற்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்று ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று தொடர்பான சுகாதார வழிகாட்டிக்கு அமைவாக ஒரு நாள் சேவையை, பத்தரமுல்லையிலுள்ள பிரதான அலுவலகத்திலும், காலி - தென் மாகாண காரியாலயத்திலும் பொதுமக்கள் இந்த ஒருநாள் சேவையை பெற்றுக்கொள்ளலாம். இதேவேளை, ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளவர்கள் , தமது விண்ணப்பப் படிவத்தை தமது கிராம உத்தியோகத்தர் ஊடாக பிரதேச செயலாளர் அலுவலகத்தில் அமைந்துள்ள அடையாள அட்டை தொடர்பான பிரிவில் ஒப்படைத்து, அதற்கான திகதி மற்றும் நேரம் என்பவற்றை ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்றும் வியானி குணத்திலக்க மேலும் தெரிவித்தார்.

தம்பியை அடித்து கொன்ற அண்ணன்

  கிரான்பாஸ், கஜீமா ​தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளது. சகோதரர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற பணப்பிரச்சினை காரணமாக இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் 28 வயதுடைய சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரான்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது

12 வயது சிறுமி மின்னல் தாக்கி பலி

  மஹவ, பன்வெவ பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்தாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் குறித்த சிறுமியின் வீட்டிற்கு முன்னால் வைத்து மின்னல் தாக்கி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளார்., சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள எச்சரிக்கை

  மக்களின் கவனயீனமாக நடவடிக்கையினால் எதிர்காலத்தில் கொவிட் தொற்றாளார்களின் எண்ணிக்கை அதிகரித்தால் தேவையற்ற விதத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (21) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார். தயவு செய்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மாகாண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலத்தில் பலர் சுற்றுலா சென்றுள்ளதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பேஸ்புக் பெயர் மாறுகிறது - 28ஆம் திகதி வெளியாகிறது புதிய பெயர்!

  பேஸ்புக் நிறுவனம் அதன் பெயரை மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புத்தகத்தை படிக்காதவர்கள் கூட பேஸ்புக் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரையும் ஊடகவியலாளராக மாற்றிய பெருமையும், மாற்றி வரும் பெருமையும் பேஸ்புக் செயலிக்கு மட்டுமே உண்டு. உலகில் எந்த செயலி முடங்கினாலும் அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்று தெரியாது. அதே நேரத்தில் ஒரு நொடி முடங்கினால் கூட பேஸ்புக் பயனர்கள் இந்த உலகையே ஸ்தம்பிக்க வைத்துவிடுவார்கள். அந்த அளவிற்கு உடலோடு உடையாக இணைந்து விட்டது பேஸ்புக். இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் தற்போது மெட்டாவர்ஸை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வருகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில், ஒக்டோபர் 28ஆம் திகதி வருடாந்த இணைப்பு மாநாட்டை நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் பங்கேற்று, அது தொடர்பான அறிவிப்பை வெளியிட உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஒருபுறமிருக்க பேஸ்புக் பெயர் மாறுகிறதா… அல்லது நிறுவனத்தின் பெயர் மாறுகிறதா என்கிற பல்வேறு சந்தேகங்கள் இருக்கும் நிலையில், அதற்கான விடை அக்டோபர் 28இல் தெரியவரலாம். இ...

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

  ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரையில் 7 ஆயிரத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாதுறை அமைச்சு தெரிவித்துள்ளது. 7,096 சுற்றுலா பயணிகள் குறித்த காலப்பகுதிக்குள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தியா, கஸகஸ்தான், ஜேர்மன், யுக்ரேன், சீனா, கெனடா, அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளில் இருந்து இவ்வாறு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் பலி

  மெதகம, பெல்லன் ஒய பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மீன் பிடி நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றில் நீராட மூன்று சிறுவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 7 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையம் திறந்துவைப்பு

  இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையமான குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இருந்து முதலாவது விமானம் குஷிநகர் சர்வதேச விமான நிலைய சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொட்டலங்கயில் இனந்தெரியாத இருவர் சடலமாக மீட்பு

  தொட்டலங்க, சேதவத்த களு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்று ஓரத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (18) இரவு முதல் குறித்த சடலம் அப்பகுதியில் இருந்ததாகவும் இன்று (19) காலை கிரான்பாஸ் பொலிஸாரினால் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை இன்று காலை தொட்டலங்க விக்டோரிய பாலத்திற்கு அருகில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இரு சடலங்கள் தொடர்பிலும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

அடிதடியில் முடிந்த அபிவிருந்தி குழு கூட்டம்

  நுவரெலியா, கொத்மலை கெட்டபுலாவ பிரிதேச அபிவிருத்தி அதிகாரிகள் காரியாலயத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கொத்மலை பிரதேச​ அபிவிருத்தி குழுவின் தலைவர், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஜயதிஸ்ஸ மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சுபாசித சில்வா ஆகியவர்களுக்கு இடையிலேயே இவ்வாறு பிரச்சினை ஏற்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் நாவலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதையல் தோண்டிய நால்வர் விளக்கமறியலில்

  பல்லம பொலிஸ் பிரிவுக்குற்பட்ட மதவாக்குளம் வெந்தக்கடுவ பிரதேச வனப்பகுதியின் பாறைப் பகுதியில் புதையல் தோண்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நல்வரை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஆனமடு நீதிவான் நீதிமன்ற நீதிபதி இன்று (19) உத்தரவிட்டுள்ளார். புத்தளம் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (18) குறித்த பிரததேசத்தில் மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22, 26, 37, 67 ஆகிய வயதுகளை உடையவர்கள் எனவும் இவர்கள் மதவாக்குளம், தெஹிவளை, துனகஹ மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேக நபர்கள் குறித்த வனப்பகுதியின் பாறைப்பகுதியில் இரண்டு அடி விட்டமும், 12 அடி நீளமும் கொண்ட பாரிய குழியொன்றை தோண்டியுள்ளதாகவும், அந்த பாறைக் குழிக்குள் உள்ளே இறங்குவதற்கு மரத்தினால் செய்யப்பட்ட ஏணி ஒன்றையும் பயன்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து, நன்கு சந்தேக நபர்க...

7 கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களுடன் இளைஞன் கைது

  ஒரு தொகை தங்க பிஸ்கட்களை தனது உடலில் மறைத்து வைத்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வௌியேற முற்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (19) அதிகாலை 2 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான நிலைய துப்பரவு செய்யும் பிரிவில் கடமையாற்றும் 25 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞனிடம் இருந்து 4,848 கிராம் நிறையுடைய 48 தங்க பிஸ்கட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தங்க பிஸ்கட்கள் சுமார 7 கோடி ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தங்க பிஸ்கட் தொகை அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்குமான அறிவிப்பு

  அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வரும் 21ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும் எனவும் இது யாருக்கும் எதிரான செயற்பாடு அல்ல எனவும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா. புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகவுள்ளன. ஒரு சில அதிபர், ஆசிரிய தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டத்தில் உள்ளன. இதன் மூலம் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் முற்றாக தடைப்பட்டுள்ளன. ஆனால் பிரத்தியேகமாக பல ஆசிரியர்கள் பணம் பெற்று கற்பித்தலில் ஈடுபட்டுள்ளனர். முதலில் போராட்டம் தொடங்கியது சம்பள உயர்ச்சிக்காக அல்ல. கொத்தலாவல பல்கலைக்கழகத்திற்கு எதிராக தனி ஒரு மனிதனாக ஒரு ஆசிரிய தொழிற் சங்கத்தின் செயலாளர் தொடக்கிய போராட்டம். இவ்விடயம் தொடர்பில் அவரது சங்கத்தினருக்கே அது தெரியாது. அவரை தனிமைப் படுத்தலுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்ட பின்னரே சம்பள முரண்பாடு தொடர்பான விடயம் பேசப்பட்டது. இந்த விடயங்கள் தொடர்பாக எவரும் எம்முடன் பே...

முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு - கட்டுப்பாட்டை இழந்த சீனியின் விலை

  உற்பத்தி விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முட்டையில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார். தற்போதும் கூட 22 ரூபாவிற்கு நுகர்வோருக்கு முட்டை வழங்கப்படுவதாகவும் அது தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டிருந்த போதிலும் சீனியில் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

  இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 608,000 தடுப்பூசிகள் இவ்வாறு எடுத்துவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த தடுப்பூசி தொகை இன்று (18) அதிகாலை 2.15 மணியளவில் இலங்கைக்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகனை கொலை செய்த தாயின் கள்ள காதலன்

  மதுரங்குளிய பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளார். முந்தலம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாயின் கள்ள காதலினால் குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் 28 வயதுடைய இளைஞன் ஒருவனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.