Skip to main content

Posts

Showing posts from August, 2021

இன்று வெளியாகவுள்ள பயணத்தடையை மீறிய முக்கிய அறிவிப்பு!

  தற்போதைய சூழ்நிலையில் பயணத்தடைக்கு அப்பாற்பட்ட தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாட்டில் பயணத்தடையை கடுமையாக அமுல்படுத்துவதா அல்லது முழு ஊரடங்கு அமுல்படுத்துவதா என்பது தொடர்பில் இன்று (13) வெள்ளிக்கிழமை நடைபெறும் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது. எவ்வாறாயினும், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வரும் நிலையில், 100இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நாளாந்தம் பதிவாகிவரும் பின்னணியில் இன்றைய கூட்டமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக கருதப்படுகிறது.

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்: மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்

  நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமான குறைந்தளவானோர் மாத்திரமே பூஜைகளில் பங்கு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லூர் ஆலய முன்வாசலில், ஆலய நிர்வாகத்தினரின் உத்தரவில் பொலிஸாரின் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் கொடியேற்ற நிகழ்வினை, பொதுமக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, இந்த செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு தொகை சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

  சீனாவிலிருந்து மேலும் 1.8 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மூலம் இந்த தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த தடுப்பூசிகள் இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்

டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா- உக்ரைன் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணம்- சம்பிக்க

  டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா, உக்ரைன் மற்றும்  இந்தியா ஆகிய சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணமென நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த சுற்றுலாப்பயணிகளின் வருகையைத் தொடர்ந்தே டெல்டா பரவல் தீவிரமடைந்துள்ளமையினால், இந்த விடயம் தொடர்பாக புலனாய்வு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமென சம்பிக்க ரணவக வலியுறுத்தியுள்ளார். மேலும் தற்போது நாடு, 4ஆவது அலை கட்டுப்பாட்டை மீறி பாரதூரமான நிலைமை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த எமக்கு இது ஒரு பாரிய பிரச்சினையல்ல என கூறி, அசமந்த போக்குடன் அரசாங்கம் செயற்பட்டமையே நாடு இக்கட்டான நிலைமையை எதிர்கொண்டுள்ளமைக்கு காரணமெனவும் சம்பிக்க ரணவக குறிப்பிட்டுள்ளார்.

2 இலட்சம் ரூபா கடனால் நடந்த கொலை: வாழைச்சேனை கொலை மர்மம் துலங்கியது!

  வாழைச்சேனையில் நேற்று காணாமல் போன பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். கடனாக பெற்ற 2 இலட்சம் ரூபாவிற்காகவே அவர் கொல்லப்பட்டுள்ளார் என்பது பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை சந்தேகநபரும், இன்னொரு கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் வாழைச்சேனை பகுதியில் வளர்ப்பு மீன் விற்பனை தொழிலில் ஈடுபடுபவர்கள். வாழைச்சேனை சந்தையில் நேற்று அந்தப் பெண்ணின் உடல் உரப்பையில் அடைக்கப்பட்ட நிலையில், வாழைச்சேனை சந்தையில் வைக்கப்பட்டுள்ளது. அல்லாபிச்சை வீதி, வாழைச்சேனை 5 என்ற முகவரியை சேர்ந்த முகமது ஹனீபா சித்தி லைலா (58) என்பவரே கொல்லப்பட்டார். வாழைச்சேனை சந்தையில் உள்ள வர்த்தக நிலையமொன்றின் முன்பாக உரப்பையில் அடைக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு சடலம் மீட்கப்பட்டது. பெண்ணை காணவில்லையென முறையிட சென்றவர்கள் தரப்பில் கொலையாளியும் பொலிஸ் நிலையம் சென்ற நிலையில், சம்பவம் தெரிய வந்து, பொலிஸ் நிலையத்திற்குள் வைத்தே கொலயாளி மடக்கிப் பிடிக்கப்பட்டார். பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் இதுவரை வெளியான தகவலின்படி. கொல்ல...

முதலில் அதை நிறுத்து.... யாஷிகாவுக்கு வனிதா அறிவுரை

  மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்கு பின்னர் முதன்முறையாக யாஷிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். உயிரிழந்த தனது தோழி குறித்தும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். யாஷிகாவின் இந்த பதிவை பார்த்து சிலர் ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தாலும், ஏராளமானோர் அவரை திட்டி கமெண்ட் செய்திருந்தனர். இந்நிலையில், யாஷிகாவுக்கு நடிகை வனிதா கமெண்ட் வாயிலாக அறிவுரை கூறி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “டார்லிங் யாருக்கு வேண்டுமானாலும் இது நடந்து இருக்கலாம். அதனால் தான் அதனை விபத்து என்கிறோம். பிறப்பும் இறப்பும் முன்பே முடிவு செய்யப்பட்டது. அதை எவராலும் மாற்ற முடியாது. உன் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு விஷயத்திற்காக உன்னை நீயே குற்றம்சொல்வதை முதலில் நிறுத்து. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கண்டுகொள்ளாதே. நீ தெளிவாக இருக்க வேண்டும். நன்றாக ஓய்வெடு, உட...

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறவும்

  இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை​யை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். டெங்கு நோய் காரணமாக தற்போது உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். டெங்கு நோய் கொரோனாவைப் போல் இல்லை எனவும் சமூக இடைவௌியை கடைபிடிப்பதால் அதில் இரந்து பாதுகாப்பு பெற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சத்து 97 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது!

அதன்படி, 97 ஆயிரத்து 966 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 85 இலட்சத்து 27 ஆயிரத்து 195 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், நேற்று 11 ஆயிரத்து 58 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், 18 இலட்சத்து 23 ஆயிரத்து 802 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நேற்று 50 ஆயிரத்து 893 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் 30 ஆயிரத்து 499 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாவது டோஸும் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று ஆயிரத்து 308 பேருக்கு ஃபைஸர் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, 5 ஆயிரத்து 625 பேருக்கு நேற்றைய தினம் மொடர்னா முதலாம் தடுப்பூசியும் நேற்று செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு!

  நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றமையால் மாற்று வழிகள் இன்றி நுகர்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறை காரணமாக லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்தமையை அடுத்து இலங்கையிலும் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. எவ்வாறிருப்பினும்  எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் டொலர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் கடன் உறுதி கடிதத்தை திறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமையினால், லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதாக அறிவித்திருந்தது. இதனையடுத்து, லாஃப்ஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்தால், அதற்கான கேள்வியை நிரப்புவதற்கு லிட்ரோ நிறுவனத்திற்கு முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக கடந்த ஜூலை 20ஆம் திகதி...