Skip to main content

Posts

Showing posts with the label சினிமா

மகனை விடுவிக்க ஷாருக் கானிடம் 25 கோடி பேரம்!

  நடிகா் ஷாருக் கானின் மகனை விடுவிக்க அவரிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக’ சொகுசு கப்பலில் சோதனை நடைபெற்றபோது சாட்சியாகச் சென்ற நபா் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்கரைப் பகுதியில் சொகுசு கப்பலில் இருந்தபோது போதைப் பொருள் வைத்திருந்ததாக நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் உள்பட பலரை அக். 3-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா். தற்போது ஆா்யன் கான் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், சட்ட நடைமுறைகளின்படி சோதனை நடைபெறும் இடங்களுக்கு பொதுமக்களில் சிலா் கட்டாயம் அழைத்துச் செல்லப்படுவா் எனவும், அவா்கள் அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டனா் என்பதற்கு சாட்சிகளாக இருப்பா் என்றும் என்சிபி துணைத் தலைவா் ஞானேஷ்வா் சிங் அண்மையில் தெரிவித்திருந்தாா். அதன்படி, சொகுசு கப்பலில் சோதனை மேற்கொண்டபோது கொசாவி, மனீஷ் பானுஷாலி உள்பட 9 போ் சாட்சிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவா் கூறினாா். அந்த 9 பேரில் பிரபாகா் சைலும் ஒருவா். இவா் கொசாவியின் தனிப் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இவா் சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெ...

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அடுத்த நடிகை!

  ஓ மணப்பெண்ணே படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் பிரியா பவானி ஷங்கர் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக நாதியா சங் வெளியேறினார். கடந்த வாரம் உடல் நலக்குறைவு காரணமாக நமிதா மாரிமுத்து வெளியேறிய நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 16 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் பிரியா பவானி ஷங்கர் நுழைய விருப்பதாக தகவல் பரவிவருகிறது. ஆனால் அவர் போட்டியாளராக நுழையவில்லை. ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து பிரியா பவானி ஷங்கர் இணைந்து நடித்துள்ள ஓ மணப்பெண்ணே படத்தைப் விளம்பரப்படுத்தும் நோக்கில் அவர் செல்லவிருக்கிறார். அவருடன் ஹரிஷ் கல்யாணும் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையவிருக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் நல்ல வெற்றியைப் பதிவு செய்த பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் பதிப்பான இந்தப் படத்தை கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள...

விண்வெளியில் ஆரம்பமான படப்பிடிப்பு

  ரஷ்யாவைச் சோ்ந்த திரைப்படக் குழுவினா் விண்வெளியில் படப்பிடிப்பு நடத்தி வெற்றிகரமாக ஞாயிற்றுக்கிழமை பூமி திரும்பினா். நடிகை யூலியா பெரெசில்ட் மற்றும் திரை இயக்குநா் க்ளிம் ஷிபெங்கோ அடங்கிய அந்த இருநபா் குழு, விண்வெளி வீரா் ஓலெக் நோவிட்ஸ்கையுடன் ரஷியாவின் சோயுஸ் விண்வெளி ஓடம் மூலம் கஜகஸ்தானிலுள்ள சா்வதேச விண்வெளி மையத்தில் தரையிறங்கினா். கடந்த 5 ஆம் தேதி சா்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற அவா்கள், ‘சேலஞ்’ என்ற திரைப்படத்தை அங்கு படமாக்கினா். திரைப்படக் குழுவுடன் சென்ற மேலும் 7 விண்வெளி வீரா்கள், அங்கேயே தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளனா். திரைப்படமொன்று உண்மையிலேயே விண்வெளியில் படமாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

நமிதாவுக்கு கொரோனா – பரவும் தகவல் – நடந்தது என்ன?

  பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமிதா வெளியேறிய காரணத்தை அவரது தோழி பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் வரலாற்றில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக கலந்துகொண்டது இதுவே முதன்முறை. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நமிதா கடந்த வார நிகழ்ச்சியில் திருநங்கைகள் படும் கஷ்டங்களை மிக உணர்ச்சிகரமாக பேசினார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை விஜய் டிவி பகிர்ந்த ப்ரமோவில் நமிதா இல்லை. அவர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்தது. ரெட் கார்டு கொடுக்கப்பட்டு நமிதா வெளியேற்றப்பட்டதாகவும், நமிதாவுக்கு கரோனா பரவல் காரணமாக வெளியேறிவிட்டதாகவும் மாறுபட்ட தகவல்கள் உலா வந்தன. இந்த நிலையில் நமிதா வெறியேறியது தொடர்பாக பேசிய அவரது தோழி, நமிதாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தாமாக முன்வந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து நமிதா பற்றி பரவும் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் யொஹானி!

  மெனிகே மகே ஹித்தே´ பாடல் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர் யொஹானி. குறித்த பாடல் யூடியூபில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து இந்தியாவில் இருந்து அழைப்பு வர இந்தியா சென்று ஹிந்தி பாடல் ஒன்றையும் அவர் பாடியுள்ளார். குறித்த பாடலும் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ஹிந்தியில் ஔிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 15 இல் யொஹானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் சல்மான் கானுடன் இணைந்து யொஹானி மெனிகே மகே ஹித்தே பாடலை பாடும் டீசர் வௌியாகி உள்ளது. குறித்த நிகழ்ச்சி ஹிந்தி கலர்ஸ் டீவியில் இன்றிரவு 9.30 க்கு ஔிப்பரப்பாக உள்ளது

அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயற்சித்த பெண்! என்ன தான் பிரச்சினை? முழுமையான விபரம்!

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தல அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது.   அக்டோபர் 4ம் தேதி, 29 வயது நிறைவடைந்த பெண்மணி பர்ஜானா,  அஜித்தின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய வீட்டு வாசலில் நின்று தீக்குளிக்க முயற்சி செய்தார். மேலும்  அஜித்தை நேரடியாக  ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என்று முழங்கினார். தீக்குளிக்க  முயற்சி செய்து எரிபொருளை உடலின் மீது ஊற்றிய அந்த பெண்மணியை போலீசார் தடுத்தனர். மேலும் சில குடங்களில் நீரை எடுத்து வந்து அந்தப் பெண்மணியின் மீது ஊற்றி அந்தப் பெண்மணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவத்திற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும் என்று சில தகவல்கள் கிடைத்துள்ளன.  இந்தப் பெண்மணி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் அந்த மருத்துவமனையின் விதிகளை மீறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்...

பிக்பாஸ் பவானிரெட்டியின் சோகமான மறுபக்கம்!

  பிக்பாஸ் தமிழ் ஐந்தாவது சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது என்பதும் நேற்றைய தினம் முதல் நாளில் போட்டியாளர்கள் அனைவரும் ஜாலியாக ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு இருந்தனர் என்பதையும் பார்த்தோம். நேற்றைய நிகழ்ச்சியில் பவானி ரெட்டி மற்றும் தாமரைச்செல்வி ஆகிய இருவரும் மனம் விட்டு பேசி கொண்டு இருந்தார்கள் என்பதும், தனக்கு 32 வயது என்று பவானி ரெட்டி கூறியபோது அதை தாமரைச்செல்வி நம்பவே இல்லை என்றும் இன்னும் சின்னப் பெண் போலவே இருக்கிறாய் என்றும் கூறினார். பிக்பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கும் பவானி ரெட்டியின் இன்னொரு பக்கம் சோகமாக இருந்தது என்பது நேற்று அவர் மனம்விட்டு பேசியதில் இருந்து தெரிய வந்தது. தான் நடிகையாக இருந்தாலும் கணவர் குடும்பம் குழந்தைகள் என சந்தோசமாக இருக்க வேண்டும் என தான் விரும்பியதாகவும், ஆனால் திருமணமான ஏழே மாதத்தில் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் அந்த தற்கொலையால் தன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது என்றும் என்ன நடந்தது என்பதை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்றும் பவானி ரெட்டி சோகமாக கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. விஜய் டிவியில் ஒரு சில சீ...

ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்: யாரை சொல்கிறார் சித்தார்த்?(படங்கள்)

  சமூக வலைத்தளங்களில் குறிப்பாக டுவிட்டரில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகர் சித்தார்த் சற்று முன்னர் ’பள்ளி ஆசிரியரிடம் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம் என்னவெனில் ஏமாறுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் இன்னொரு ட்வீட்டில் ’நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்குற ஒரு தெரு நாய்க்கு கிடைக்கும்ன்னு எழுதி இருந்தால், அதை யாராலும் மாற்ற முடியாது’ என்று பதிவு செய்துள்ளார். நடிகர் சித்தார்த்தின் இந்த இரண்டு பதிவுகளும் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அவர் யாரை குறிப்பிட்டு இந்த பதிவு செய்துள்ளார் என்று பெரும்பாலான ரசிகர்கள் யூகித்து கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகிறார்கள். நடிகர் சித்தார்த் யாரை குறிப்பிடுகிறார் என்று உங்களுக்கு புரிந்தால் நீங்களும் கமெண்ட் பகுதியில் பதிவு செய்யுங்கள்!

7 கண்டங்களை பைக்கிலே சுற்றிய பெண்ணை சந்தித்த அஜித்குமார்.. கோட் சூட்டுடன் கம்பீரமான புகைப்படம்.

  பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் மற்றும் நடிகைகள் படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், படங்களை தயாரிப்பது, இயக்குவது மற்றும் இதர பணிகளில் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு மாறாக நடிகர் அஜித் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் பைக் ரேசில் ஈடுபடுவது, துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகிறார். வருமானம் ஈட்டும் பணிகளை விடுத்து தனக்கு பிடித்த போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித்தின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், கடந்த மார்ச் மாதம் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்று அசத்தினார். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற அஜித், தற்போது தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க உள்ளார். இப்போட்டி விரைவில் டெல்லியில் தொடங்க உள்ளது. இதற்காக சமீபத்தில் டெல்லி சென்ற நடிகர் அஜித், அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். பயிற்சிக்கிடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் தஜ்மஹாலை சுற்றி பார்க்...