Skip to main content

ATM இயந்திரத்தை சோதனையிட்ட வங்கி அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

 


மின்னேரிய-மினிஹிரிகம பிரதேசத்தில் வர்த்தக கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றின் ATM இயந்திரத்தை உடைத்து 10 மில்லியனுக்கும் அதிக தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

குறித்த ATM இயந்திரம் தற்காலிகமாக செயலிழந்ததைத் தொடர்ந்து, வங்கி அதிகாரிகள் நேற்று (27) இயந்திரத்தை சோதனையிட்ட போதே இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை மின்னேரிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Comments