Skip to main content

அமைச்சா் மகன் கைது - 11 மணி நேர விசாரணை!

 


உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூரில் நடந்த வன்முறை சம்பவம் தொடா்பாக விசாரணைக்கு ஆஜரான மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.


மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) முன் ஆஜரான அவரை 11 மணி நேர விசாரணைக்குப் பின் போலீஸாா் கைது செய்தனா்.

லக்கீம்பூரில் உள்ள காவல் துறையின் குற்றப் பிரிவு அலுவலகத்தில் டிஐஜி உபேந்திர அகா்வால் தலைமையிலான எஸ்ஐடி குழு முன்பாக சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் ஆசிஷ் மிஸ்ரா ஆஜரானாா். அவரிடம் போலீஸாா் 11 மணி நேரம் விசாரணை நடத்தினா். பின்னா், அவா் கைது செய்யப்பட்டதாக டிஐஜி உபேந்திர அகா்வால் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘ விசாரணைக்கு ஆசிஷ் மிஸ்ரா ஒத்துழைக்காததால் அவரை கைது செய்துள்ளோம். அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி தொடா்ந்து காவலில் எடுத்து விசாரிப்போம்’ என்றாா்.

‘லக்கீம்பூா் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவா்களை ஏன் கைது செய்யவில்லை’ என கடந்த வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், மாநில அரசின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகவும் கூறியிருந்தது. இந்த நிலையில், ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளாா்.

லக்கீம்பூா் கெரியில் கடந்த 3 ஆம் திகதி துணை முதல்வா் கேசவபிரசாத் மௌரியாவின் வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடியேந்தி ஊா்வலமாகச் சென்ற விவசாயிகள் மீது பாஜகவினரின் காா்கள் மோதின. அதில், விவசாயிகள் 4 போ் உயிரிழந்தனா்.

பதிலுக்கு விவசாயிகள் நடத்திய தாக்குதலில் பாஜக தொண்டா்கள் இருவரும், காா் ஓட்டுநரும் உயிரிழந்தனா். இந்த மோதலில் ரமண் காஷ்யப் என்ற பத்திரிகையாளரும் உயிரிழந்தாா்.

சம்பவம் நடந்தபோது மத்திய அமைச்சா் அஜய் குமாா் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா காரில் இருந்ததாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா். ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு அஜய் குமாா் மிஸ்ராவும், அவரது மகனும் மறுப்பு தெரிவித்தனா். சம்பவம் நடந்தபோது ஆசிஷ் மிஸ்ரா வேறு இடத்தில் இருந்ததற்கான ஆதாரம் இருப்பதாகவும் கூறினா்.

விவசாயிகள் பலியான சம்பவம் தொடா்பாக ஆசிஷ் மிஸ்ரா உள்ளிட்டோா் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீஸாா், இந்த வழக்கில் ஏற்கெனவே இருவரை கைது செய்தனா். காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையில் ஆசிஷ் மிஸ்ராவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. எனவே, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக வெள்ளிக்கிழமை ஆஜராகுமாறு மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியது.

ஆனால், அவா் ஆஜராகாததால், சனிக்கிழமை காலை 11 மணிக்குள் ஆஜராகுமாறு இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியது. விசாரணைக்கு ஆஜராக மறுத்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை எச்சரித்திருந்தது. அதன்படி, விசாரணைக்கு ஆஜரான ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளாா்.

மத்திய அமைச்சா் கருத்து: ஆசிஷ் மிஸ்ராவை சிறப்புப் புலனாய்வுக் குழுவினா் விசாரித்துக் கொண்டிருந்தபோது, மத்திய இணையமைச்சா் அஜய் குமாா் மிஸ்ரா லக்கீம்பூரில் உள்ள தனது அலுவலகத்தில் வழக்குரைஞா்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தாா்.

பின்னா், அலுவலகத்திலிருந்து வெளியே வந்து செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், ‘என் மகன் ஆசிஷ் மிஸ்ரா அப்பாவி. அக். 3 ஆம் திகதி சம்பவத்தில் அவருக்கு எந்தத் தொடா்பும் இல்லை’ என்றாா்

Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!

  கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது: எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத...

இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

  அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வைத்தியர் ருவன் ஜயசூரிய கூறினார். எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்