Skip to main content

அஜித் வீட்டின் முன் தீக்குளிக்க முயற்சித்த பெண்! என்ன தான் பிரச்சினை? முழுமையான விபரம்!

 



தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் குமார் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தல அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. 


 அக்டோபர் 4ம் தேதி, 29 வயது நிறைவடைந்த பெண்மணி பர்ஜானா,  அஜித்தின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள புதிய வீட்டு வாசலில் நின்று தீக்குளிக்க முயற்சி செய்தார். மேலும்  அஜித்தை நேரடியாக  ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், தனது சாவிற்கு அஜித் தான் காரணம் என்று முழங்கினார்.


தீக்குளிக்க  முயற்சி செய்து எரிபொருளை உடலின் மீது ஊற்றிய அந்த பெண்மணியை போலீசார் தடுத்தனர். மேலும் சில குடங்களில் நீரை எடுத்து வந்து அந்தப் பெண்மணியின் மீது ஊற்றி அந்தப் பெண்மணியை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவமானது சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த சம்பவத்திற்கு அடிப்படைக் காரணம் என்னவாக இருக்கும் என்று சில தகவல்கள் கிடைத்துள்ளன. 


இந்தப் பெண்மணி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்ததாகவும் அந்த மருத்துவமனையின் விதிகளை மீறியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பதும் தெரிகிறது.  பணி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்றால், நடிகர் அஜித்தும் அவரது மனைவி ஷாலினியும் வருடாந்திர பொது மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றனர்.


அந்த மருத்துவமனைக்கு வரும் வாடிக்கையாளர்களின் பிரைவசிக்காக மருத்துவமனையினுள் புகைபடமோ அல்லது வீடியோவோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி இந்த பெண்மணி அஜித்துடன் செல்பி புகைப்படமும், அஜித்- ஷாலினி மருத்துவமனையின் உள்ளே வரும் வீடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.


இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் பரவி, அஜித் ஷாலினி தம்பதியினர் கொரோணா பரிசோதனைக்காக சென்று வந்தனர் என்கிற தவறான தகவல்கள் பரவியுள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் இந்தப் பெண்மணியை பணி நீக்கம் செய்தது. 


பணிநீக்கம் செய்யப்பட்ட இந்த பெண்மணி அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி அவர்களை தொடர்பு கொண்டு, இழந்த வேலையை மீண்டும் பெற்றுத் தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வேண்டுகோளை ஏற்ற நடிகை ஷாலினி மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசி இந்த பெண்மணியை மீண்டும் வேலைக்கு அமர்த்தியுள்ளார். 


பின்னர் மீண்டும் மருத்துவமனை நிர்வாகத்தின் விதிகளை இந்த பெண்மணி வேறொரு சம்பவத்தின் போது மீறியுள்ளார். இதனால் மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்டார் இந்த பெண்மணி.  அதன் பின்னர் மீண்டும் ஷாலினியை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். தல அஜித் அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா ஆகியோர் இதில் தலையிட வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். பொருளாதார ரீதியாக உதவி செய்வதாகவும், மருத்துவமனையின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளில் நாங்கள் தலையிட முடியாது என்றும் நடிகை ஷாலினி அந்தப் பெண்மணியிடம் தெரிவித்துள்ளார். மேற்கொண்டு உதவிகளுக்கு அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா அவர்களை தொடர்பு கொள்ளுமாறும் நடிகை ஷாலினி அறிவுறுத்தி உள்ளார்.


இந்தப் பெண்மணி தொடர்பு கொள்வதற்கு முன்பே நடிகர் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, இந்தப் பெண்மணியை தொடர்புகொண்டு இந்தப் பெண்மணியின் குழந்தைகளின் படிப்புச் செலவுக்கான பணத்தை பள்ளிகளில் நேரடியாக கட்டுவதற்காக குழந்தைகளின் விபரங்களை கேட்டுள்ளார். இதற்கு அந்தப் பெண்மணி குழந்தைகளின் கல்வி கட்டணத்தை என்னிடம் நேரடியாக பணமாக கொடுத்து விடுங்கள் என்று பதில்  அளித்துள்ளார்.





Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!

  கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது: எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத...

இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

  அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வைத்தியர் ருவன் ஜயசூரிய கூறினார். எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்