Skip to main content

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் திறக்க அனுமதி

 


மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் எதிர்வரும் திங்கட்கிழமை (29) முதல் திறப்பதற்கு சுகாதார அமைச்சகம் கல்வி அமைச்சுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் விளைவாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் பெரும்பாலான தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையிலேயே மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு அனுமதியளித்துள்ளது.

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் 5,11 மற்றும் 13 தரங்களின் கல்வி நடவடிக்கை கடந்த 15ஆம் திகதி ஆரம்பமாகின.

அதனைத் தொடர்ந்து, ஏனைய தரங்களை எதிர்வரும் ஏப்ரல் 19ஆம்திகதி ஆரம்பிப்பதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments