Skip to main content

Posts

பஸ் விபத்திற்கான காரணம் வௌியானது!

  தலைமன்னாரில் தனியார் பேரூந்து புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகிய சந்தர்ப்பத்தில் புகையிரத கடவையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை எனவும், புகையிரத கடவைக்கான தடை குறித்த நேரத்தில் இடப்படவில்லை எனவும் தெரிய வந்துள்ளது. மன்னாரில் இருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த தனியார் பேரூந்து நேற்று (16) மதியம் 2 மணியளவில் தலை மன்னார் பகுதியில் புகையிரதத்துடன் மோதி விபத்திற்கு உள்ளாகியது. இந்த விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர். சம்பவம் இடம் பெற்ற போது குறித்த தனியார் பேரூந்தில் 30 பேர் பயணித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள், பயணிகள் உட்பட 25 பேர் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதன் போது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். படுகாயமடைந்த ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.செந்தூர்பதிராஜா தெரிவித்தார். இதேவேளை குற...

அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி மீட்பு!

  கைது செய்யப்பட்டுள்ள மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சட்டத்திற்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டு, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். சட்டமா அதிபரின் ஆலோசணைக்கமைய அவர் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார். மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பிலும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் இன்று பேரணி!

  இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பேரணியாகச் சென்று, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்த போராட்டத்திற்கு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தலைமன்னாரில் பஸ் ரயிலுடன் மோதி விபத்து: 10 பேர் வைத்தியசாலையில் அனுமதி

  இன்று பிற்பகல் 2 மணியளவில் தலைமன்னார் – பியர் பகுதியில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

யாழ். பேரணியில் மக்களை உணர்வு பூர்வமாக கலந்து கொள்ள மணிவண்ணன் அழைப்பு!

  யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு , கிழக்கு மக்கள் உணர்வு பூர்மாக கலந்து கொண்டு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார். பேரணி தொடர்பாக வீ. மணிவண்ணன்  வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ”யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் யாழில் சுழற்சி முறையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்கலைக்கழக மாணவர்களினால் பல்வேறு தரப்பினரிடம் இந்த போராட்டத்திற்கு ஆதரவு கோரப்பட்டுள்ளது. தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்றும் , தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களான தேசியம் , தாயகம் , சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிக்கும் வகையில் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் நாளைய தினம...

வீட்டாரின் கவனயீனத்தால் பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது குழந்தை

  கல்கிரியாகம- ஆடியாகல பகுதியிலுள்ள வீடொன்றில், நிர்மாணிக்கப்பட்டிருந்த மீன் தொட்டிக்குள்  தவறி விழுந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஒரு வயதுடைய குழந்தையே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சம்பவம் இடம்பெற்றவேளையில் வீட்டில் அனைவரும் இருந்துள்ளதுடன், வீட்டாரின் கவனயீனத்தால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கல்கிரியாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நிந்தவூரில் 7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுக்களுடன் மூவர் கைது!

  நிந்தவூரில் 7 இலட்சத்தி 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ளநோட்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸார் மூவரையும் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். கைதாகிய குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டில் இருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5000 ரூபா நோட்டு பணம் அச்சிடும் தாள்கள் அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாறு கைதான நபர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் ஒலுவில் பாலமுனை கல்முனை ஆகிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைதானவர்களாவர். இதில் கைதான சந்தேக நபர் ஒருவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னரும் கள்ள நோட்டுக்களை அச்சடித்து விநியோகித்த குற்றச்சாட்டில் கைதாகி விடுதலையானவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.