Skip to main content

முட்டை விலை அதிகரிக்க வாய்ப்பு - கட்டுப்பாட்டை இழந்த சீனியின் விலை

 


உற்பத்தி விலையை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முட்டையில் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளார்.


தற்போதும் கூட 22 ரூபாவிற்கு நுகர்வோருக்கு முட்டை வழங்கப்படுவதாகவும் அது தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

குளியாபிட்டிய பகுதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டிருந்த போதிலும் சீனியில் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Comments