Skip to main content

மலையகச் சிறுமி உயிரிழந்த சம்பவம் – ரிஷாட்டிற்கு விளக்கமறியல் நீடிப்பு

 


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, அவரை எதிர்வரும் 14ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணிபுரிந்து வந்த மலையகச் சிறுமியொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தின் 5 ஆவது சந்தேகநபராக ரிஷாட் பதியுதீன் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments