மாகாணங்களுக்கு இடையில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
வைத்தியசாலை ஊழியர்களின் போக்குவரத்திற்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்களை தவறாக பயன்படுத்தி இவ்வாறு சிலர் போக்குவரத்தில் ஈடுபடுவதாக அவர் சாடியுள்ளார்.
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தாலும் வைத்தியசாலை ஊழியர்களுக்காக மாகாணங்களுக்கு இடையில் பயணிப்பதற்காக 17 பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment