திருகோணமலை, கோமரங்கடவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கட்டுத்துவக்கு ஒன்றினை சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த சந்தேக நபயொருவரை இன்று (06) கைது செய்துள்ளதாக கோமரங்கடவெல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மல்போசல, கோமரங்கடவெல பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரேயே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் மிருகங்களை வேட்டையாடுவதற்காக சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி வீட்டின் பின்புறத்தில் கட்டுத்துவக்கினை மறைத்து வைத்திருந்த நிலையிலே கோமரங்கடவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கட்டுத்துவக்குடன் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment