Skip to main content

மதுபானசாலைகளை மூடுமாறு கலால் திணைக்களம் உத்தரவு


 2021 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் கலால் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


போயா தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் போயா தினம் உட்பட இரு தினங்களுக்கு மதுபானசாலைகள் பூட்டப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் வௌியாகும் செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Comments