Skip to main content

பண்டோரா ஆவணம் குறித்து விரிவான விசாரணை – அமைச்சரவையில் முன்மொழிவு


 பண்டோரா ஆவணங்கள் மற்றும் அது நாட்டில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அமைச்சரவை நேற்று இரவு கூடிய போது இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் பல அமைச்சர்கள், நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரது கணவர் திருக்குமார் நடேசன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சரவை கூட்டாக ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை தொடங்கப்படுமென அரசு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளவில் முறைகேடாக வெளிநாட்டில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்தவர்கள் பெயர் அடங்கிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பன்டோரா பேப்பர்ஸ் என்ற பெயரில் வெளியான இந்த ஆவணத்தில்,  இலங்கையின் முன்னாள் அமைச்சரான நிருபமா ராஜபக்ஷவின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளது.

நிருபமா ராஜபக்ஷ மற்றும் அவரத கணவர் நடேசன் இருவரும் இணைந்து லண்டன் மற்றும் சிட்னியில் சொகுசு குடியிருப்புகளை வாங்குவதற்கும், முதலீடு செய்வதற்கும் ஷெல் நிறுவனத்தை பயன்படுத்தியதாக அந்த அறிக்கை விரிவாக கூறுகிறது.

மேலும் நடேசனின் நீண்டகால ஆலோசகர், 2011 ஆம் ஆண்டு நிலவரப்படி, அவரது ஒட்டுமொத்த சொத்தாக 160 மில்லியன் டொலருக்கும் அதிகமாக வைத்திருந்தார் என ரகசிய மின்னஞ்சல்களை மேற்கோளிட்டு தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏசியாசிட்டி டிரஸ்ட் நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்தது என்றும் இதன் சொத்து மதிப்பு சுமார் 18 மில்லியன் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த இரகசிய ஆவணங்கள் குறித்து நிருபமா ராஜபக்ஷ மற்றும் நடேசன் ஆகியோர் பதிலளிக்க மறுத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் 2010 முதல் 2015 வரை நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பின் பிரதி அமைச்சராக பணியாற்றிய நிருபமா ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!

  கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது: எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத...

இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

  அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வைத்தியர் ருவன் ஜயசூரிய கூறினார். எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்