Skip to main content

நகரங்களின் வானிலை பற்றிய எதிர்வுகூறல்

 


இலங்கைக்கு அண்மையாக கீழ் வளிமண்டல தளம்பல் நிலை உருவாகியுள்ளதால் இன்றும் நாளையும் (ஓக்டோபர் 1, 2 ஆம் திகதிகளில்) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

மழை நிலைமை : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 10-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்கொந்தளிப்பாகவும்காணப்படும்.

அனுராதபுரம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மட்டக்களப்பு - மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கொழும்பு - அடிக்கடி மழை பெய்யும்

காலி - அடிக்கடி மழை பெய்யும்

யாழ்ப்பாணம் - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

கண்டி - அடிக்கடி மழை பெய்யும்

நுவரெலியா - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்

இரத்தினபுரி - அடிக்கடி மழை பெய்யும்

திருகோணமலை - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

மன்னார் - அடிக்கடி மழை பெய்யும்

Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு

  கடலில் காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்ட, குறித்த நான்கு கடற்றொழிலாளர்களும் அந்தமான் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்ககொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஏழு நாட்கள் கடலில் மீன்பிடிக்கும் ஏற்பாடுகளுடன் நான்கு கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர். எனினும் திட்டமிட்டபடி குறித்த கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், சம்மந்தப்பட்ட உறவினர்களினால் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இவ்விடயத்தில் கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

மகனை விடுவிக்க ஷாருக் கானிடம் 25 கோடி பேரம்!

  நடிகா் ஷாருக் கானின் மகனை விடுவிக்க அவரிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக’ சொகுசு கப்பலில் சோதனை நடைபெற்றபோது சாட்சியாகச் சென்ற நபா் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்கரைப் பகுதியில் சொகுசு கப்பலில் இருந்தபோது போதைப் பொருள் வைத்திருந்ததாக நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் உள்பட பலரை அக். 3-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா். தற்போது ஆா்யன் கான் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், சட்ட நடைமுறைகளின்படி சோதனை நடைபெறும் இடங்களுக்கு பொதுமக்களில் சிலா் கட்டாயம் அழைத்துச் செல்லப்படுவா் எனவும், அவா்கள் அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டனா் என்பதற்கு சாட்சிகளாக இருப்பா் என்றும் என்சிபி துணைத் தலைவா் ஞானேஷ்வா் சிங் அண்மையில் தெரிவித்திருந்தாா். அதன்படி, சொகுசு கப்பலில் சோதனை மேற்கொண்டபோது கொசாவி, மனீஷ் பானுஷாலி உள்பட 9 போ் சாட்சிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவா் கூறினாா். அந்த 9 பேரில் பிரபாகா் சைலும் ஒருவா். இவா் கொசாவியின் தனிப் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இவா் சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெ...