தம்புள்ள கலோகஹஎல பகுதியிலுள்ள கைவிடப்பட்ட வீடு ஒன்றிலிருந்து மூன்று நாட்களின் முன்னர் காணாமல் போன 14 வயது மாணவியின் சடலம் மீட் கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதி முதல் சிறுமி காணாமல் போயிருந்தார்.7 வயது சிறுமிக்கு கற்பிப்பதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை.
தம்புள்ளை, ஆத்துப்பராயவில் வசிக்கும் புத்தினி பியுமாலி என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டார்.
டி எஸ் சேனநாயக்க வித்தியாலயத்தி 9 ம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார்.
மாணவி கணிதத்தில் திறமையானவர். பல இளைய மாணவர்களிற்கு கணிதம் கற்பித்து வந்துள்ளார்.
9 ம் திகதி காலை தம்புள்ளை க லொகஹஎல பகுதியில் கைவிடப்பட்ட வீட்டில்
இருந்து துர்நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
போலிசார் சென்றபோது, வீட்டு கட்டிலில் சடலம் இருந்ததையும், துர்நாற்றம் வீசுவதையும் அவதானித்து, தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் அனுமதி பெற்று கதவுகளை திறந்து உள் நுழைந்தனர்.
அங்குள்ள கட்டில் ஒன்றில் சிறுமியின் சடலம் காணப்பட்டது. சிறுமியின் உடலில் இருந்து ஆடைகள் அகற்றப்பட்டு, நிர்வாண கோலத்திலேயே,சடலம் காணப்பட்டது.
மாணவியை அழைத்து சென்ற நபரின் வீட்டிற்கு பொலிசார் சென்றபோது, தனது மனைவி மகளுடன்அவர் தலைமறைவாகியுள்ளார்.
Comments
Post a Comment