Skip to main content

100 கோடி ரூபா பணம் தருவதாக நிதி மோசடி - 9 பேர் கைது

 


இடி தாங்கி ஒன்றினை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்து, அதன் பின் சுமார் 100 கோடி ரூபா பணம் தருவதாக கூறி ஒருவரிடம் பல இலட்சம் ரூபா பணம் பெற்று மோசடியில் ஈடுபட்ட 9 சந்தேக நபர்களை நுவரெலியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


நுவரெலியா குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்று (10) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி ஒருவரின் பின் ஒருவராக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், போலி வைத்தியர் ஒருவரும், போலி சட்டதரணி ஒருவரும் இதில் அடங்குகின்றனர்.

இடி தாங்கி ஒன்றினை கொள்வனவு செய்ய பணம் தேவைப்படுவதாகவும், அந்த இடி தாங்கியை வெளிநாட்டில் உள்ள ஒருவருக்கு விற்ற பின்னர் கிடைக்கும் பணத்தில் பாரிய தொகையை இலாபமாக தர முடியும் என கூறியே இந்த மோசடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 வயதுக்கும் 60 வயதுக்கும் இடையிலான கொழும்பு, கண்டி, கெக்கிராவை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

அத்தோடு, இவர்கள் பயன்படுத்திய இரு வேன்கள் மற்றும் ஒரு கார் ஆகியன நுவரெலியா பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ள நிலையில், கோடிக்கணக்கான மோசடி செய்யப்பட்ட பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அவர்களது கையடக்க தொலைபேசிகளில் இருந்த இடி தாங்கி படம் ஒன்றை காண்பித்து, வெளிநாட்டில் உள்ள நபர் ஒருவருக்கு 30 ஆயிரம் கோடி ரூபாவுக்கு இதனை விற்பனை செய்யவுள்ளோம், இந்த இடி தாங்கியை எடுப்பதற்கு ஒரு தொகை பணம் தேவைப்படுவதாக கூறி ஒருவரிடமிருந்து 5 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அந்த பணத்தை வழங்கும் நபருக்கு, இடி தாங்கியை விற்ற பின்னர் 100 கோடி ரூபாவை தம்மால் இலாபமாக தர முடியும் எனவும் சந்தேக நபர்கள் கூறியுள்ளனர்.

இதன்போது போலி சட்டத்தரணியாக நடித்துள்ள ஒருவர், போலி சட்டத்தரணி முத்திரை ஒன்றினையும் பயன்படுத்தி, அதனை கொண்டு பணம் செலுத்தும் நபர்களுடன் போலி ஒப்பந்தம் ஒன்றும் நுவரெலியாவில் விடுதி ஒன்றில் வைத்து கைச்சாத்திடப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே குறித்த பண மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு சந்தேக நபர்களை கைது செய்யும் போது, அவர்கள் மோசடி செய்த ஒரு கோடியே 33 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பணம் நுவரெலியா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் நுவரெலியா மாவட்ட குற்ற விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

காணாமல் போன கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு

  கடலில் காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சி காரணமாக நான்கு வாரங்களின் பின்னர் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் இந்திய கடற்படையினரால் மீட்கப்பட்ட, குறித்த நான்கு கடற்றொழிலாளர்களும் அந்தமான் தீவுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மேற்ககொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த செப்ரெம்பர் மாதம் 26 ஆம் திகதி வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஏழு நாட்கள் கடலில் மீன்பிடிக்கும் ஏற்பாடுகளுடன் நான்கு கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர். எனினும் திட்டமிட்டபடி குறித்த கடற்றொழிலாளர்கள் கரை திரும்பாத நிலையில், சம்மந்தப்பட்ட உறவினர்களினால் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இவ்விடயத்தில் கவனம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு...

மகனை விடுவிக்க ஷாருக் கானிடம் 25 கோடி பேரம்!

  நடிகா் ஷாருக் கானின் மகனை விடுவிக்க அவரிடம் ரூ.25 கோடி பேரம் பேசப்பட்டதாக’ சொகுசு கப்பலில் சோதனை நடைபெற்றபோது சாட்சியாகச் சென்ற நபா் குற்றஞ்சாட்டியுள்ளாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பை கடற்கரைப் பகுதியில் சொகுசு கப்பலில் இருந்தபோது போதைப் பொருள் வைத்திருந்ததாக நடிகா் ஷாருக் கானின் மகன் ஆா்யன் கான் உள்பட பலரை அக். 3-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் (என்சிபி) கைது செய்தனா். தற்போது ஆா்யன் கான் மும்பை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், சட்ட நடைமுறைகளின்படி சோதனை நடைபெறும் இடங்களுக்கு பொதுமக்களில் சிலா் கட்டாயம் அழைத்துச் செல்லப்படுவா் எனவும், அவா்கள் அதிகாரிகள் என்ன நடவடிக்கை மேற்கொண்டனா் என்பதற்கு சாட்சிகளாக இருப்பா் என்றும் என்சிபி துணைத் தலைவா் ஞானேஷ்வா் சிங் அண்மையில் தெரிவித்திருந்தாா். அதன்படி, சொகுசு கப்பலில் சோதனை மேற்கொண்டபோது கொசாவி, மனீஷ் பானுஷாலி உள்பட 9 போ் சாட்சிகளாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவா் கூறினாா். அந்த 9 பேரில் பிரபாகா் சைலும் ஒருவா். இவா் கொசாவியின் தனிப் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்துள்ளாா். இவா் சமூக ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை வெ...