Skip to main content

ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் விருப்பம்

 


76ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா். மேலும், ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராக சுஹைல் ஷாஹீனை நியமித்துள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸுக்கு தலிபான்கள் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

செப்டம்பா் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெறும் 76ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறோம்.

ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி, கடந்த மாதம் 15ஆம் திகதி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டாா். அவரை உலக நாடுகள் இனியும் ஆப்கன் அதிபராக அங்கீகரிக்கவில்லை. எனவே, ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் சாா்பில் நாங்கள்தான் பங்கேற்க முடியும்.

ஐ.நா.வுக்கு முன்னைய அரசால் நியமிக்கப்பட்ட தூதா் கிராம் ஐசக்ஸாயின் பணிகள் நிறைவடைந்துவிட்டன. எனவே, அவரை இனியும் ஆப்கானிஸ்தானின் பிரதிநிதியாகக் கருத முடியாது.

புதிய தூதராக முகமது சுஹைன் ஷாஹீனை நியமித்துள்ளோம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பா் 20ஆம் திகதியிடப்பட்ட அந்தக் கடிதம், ‘ஆப்கன் இஸ்லாமிய அமீரகம்’ என்ற முத்திரையின் கீழ், வெளியுறவுத் துறை அமைச்சா் அமீா் கான் முத்தக்கியின் கையொப்பத்துடன் ஐ.நா. பொதுச் செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குட்டெரெஸின் துணை செய்தித் தொடா்பாளா் ஃபா்ஹான் ஹக் தெரிவித்தாா்.

இந்த இரு தகவல்கள் குறித்தும் ஐ.நா. பொதுச் சபை தலைவருடன் ஆலோசனை நடத்திய பிறகு, 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின் அமைப்புக் குழுவுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.

அதையடுத்து, 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் ஆப்கானிஸ்தான் பிரதிநிதியாக யாரை ஏற்பது என்று அமைப்புக் குழு முடிவெடுக்கும்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் ஆப்கன் வெளியுறவுத் துறை அமைச்சா் உரையாற்ற விரும்புவதாக ‘தி நியூயாா்க் டைம்ஸ்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. பின்னா் அங்கு தலிபான்களுக்கு எதிரானவா்களைக் கொண்டு புதிய அரசும் தேசிய ராணுவமும் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் அபோட்டாபாதில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரை படிப்படியாக திரும்ப அழைக்க அமெரிக்கா முடிவு செய்தது.

அந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வெகு வேகமாக முன்னேறி வந்த தலிபான்கள், நாடு முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த மாதம் 15ஆம் திகதி கொண்டு வந்தனா்.

Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!

  கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது: எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத...

இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

  அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வைத்தியர் ருவன் ஜயசூரிய கூறினார். எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்