Skip to main content

மனைவியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற கணவன்

 





எம்பிலிப்பிட்டி-கரதமண்டிய பிரதேசத்தில் மனைவியை துப்பாக்கியால் கணவர் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

தனிப்பட்ட தகராறு காரணமாக நேற்றையதினம் (26) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சம்பவத்தில் எம்பிலிப்பிட்டி-நவநகர பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர் பயன்படுத்திய துப்பாக்கியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரை இன்று (27) எம்பிலிப்பிட்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Comments