நாரம்மல-தம்பெலெஸ்ஸ பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
நேற்று (24) பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொஹூவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுபோவில பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் போது ஒருவர் மற்றைய நபரை பலமாக தாக்கி கீழே வீழ்த்தியுள்ளார்.
கீழே விழுந்த நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Comments
Post a Comment