Skip to main content

ஜனாதிபதியுடன் தொடர்புகொள்ளத் தயார் – புலம்பெயர் தமிழ் குழு

 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தொடர்புகொள்ளத் தயாராக இருப்பதாக லண்டனில் உள்ள ஒரு செல்வாக்குள்ள புலம்பெயர் தமிழ் குழுவொன்று தெரிவித்துள்ளது.

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்வந்தமை ஒரு முற்போக்கான நடவடிக்கை என உலகளாவிய தமிழ் மன்றம் (GTF) என்ற அந்தக்குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸிடம் இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினைகள் நாட்டின் உள் பொறிமுறையின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான கலந்துரையாடல்களுக்கு புலம்பெயர் தமிழர்களை அழைக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் புலம்பெயர் மக்களுடன் தொடர்புகொள்ள விரும்புகிறார் என்பது நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும் அதை தாம் வரவேற்பதாகவும் உலகளாவிய தமிழ் மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறியுள்ளார்.

இருப்பினும், ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2021இல், உலகளாவிய தமிழ் மன்றம் போன்ற தடைசெய்யப்பட்ட அமைப்புகளை அரசாங்கம் வர்த்தமானியாக  வெளியிட்ட நிலையில், ஜனாதிபதியின் திடீர் மனமாற்றம் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எவ்வாறிருப்பினும் தாங்கள் இலங்கை மக்களுக்கு உதவுவதை நிறுத்தவில்லை என்றும் அண்மையில்கூட, பல மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்லாது முழு நாட்டிற்கும் வழங்க முன்வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே,  இலங்கையின் அனைத்து மக்களின் குறைகளையும் தீர்க்க, தாங்கள் யாருடனும் பேசத் தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பேச விரும்பும் உள்நாட்டு வழிமுறைகளைப் பொறுத்தவரை, நீதித்துறை அல்லாத செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிப்பதற்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

எரிபொருள் தாங்கி வெடித்ததில் 91 பேர் உயிரிழப்பு!

  சியரா லியோன் தலைநகர் ப்ரீடவுனில் எரிபொருள் தாங்கியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 91 பேர் உயிரிழந்துள்ளனர். எரிபொருள் கொள்கலன் தீப்பற்றுவதற்கு முன்னர், அதிலிருந்த எரிபொருள் கசிந்தமையால் பரபரப்பான குறித்த வீதியில் பயணித்த வாகனங்கள் தீப்பற்றியுள்ளன. கொள்கலனிலிருந்து எரிபொருள் கசிந்ததை தொடர்ந்து அதனை சேகரிப்பதற்காக சாரதிகள் முற்பட்ட வேளையில், வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் இதன்போதே திடீரென தீப்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்து குறித்த செய்திகளை வெளியிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், விபத்துக்குள்ளான வாகனங்களை சுற்றி சடலங்கள் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளன. விபத்து குறித்து தமது கவலையை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஜூலியஸ் மடா பயோ, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

கொரோனா மரணத்தை தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!

  கொரோனா சிகிச்சைக்காக தாங்கள் உருவாக்கியுள்ள மாத்திரை, அந்த நோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தையும் உயிரிழப்பு அபாயத்தையும் 90 சதவீதம் வரை குறைக்கும் என்று அமெரிக்காவின் ஃபைஸா் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த மருந்தின் ஆய்வு முடிவுகள் தெரிவிப்பதாவது: எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரை 775 பெரியவா்களுக்குக் கொடுத்து சோதித்துப் பாா்க்கப்பட்டது. ஆய்வில் பங்கேற்ற அனைவரும், அதற்கு முன்னா் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் ஆவா். அந்த ஆய்வின்போது, எங்களின் கொரோனா சிகிச்சை மாத்திரையுடன் மற்றொரு தீநுண்மி எதிா்ப்பு மருந்தும் பங்கேற்பாளா்களுக்கு அளிக்கப்பட்டது. அதில், கொரோனா சிகிச்சை மாத்திரை பெற்றுக் கொண்ட குழுவினருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய அளவுக்கு நோய் தீவிரமடையும் அபாயம் 89 சதவீதம் குறைந்தது தெரிய வந்தது. மேலும், அந்தக் குழுவில் யாரும் ககொரோனாவுக்கு பலியாகவில்லை. சிகிச்சை மாத்திரை அளிக்கப்பட்டவா்களில் 1 சதவீதத்துக்கும் குறைவானவா்களே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதே நேரம், எங்களின் கொரோனா மாத்திரையைப் பயன்படுத...

இரண்டு மாதங்களில் கொரோனா வைரஸின் மற்றொரு அலை – மருத்துவ அதிகாரிகள் சங்கம்

  அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு கொரோனா தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக அச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் குறிப்பிட்டார். இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் வைத்தியர் ருவன் ஜயசூரிய கூறினார். எவ்வாறாயினும், இலங்கையின் 60% க்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளமையினால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருவதாகக் கூறிய வைத்தியர் ருவன் ஜயசூரிய, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்