Skip to main content

யாழ்.மாநகரில் இன்று 2 பூட் சிற்றிகளில் சொக்லேட், சம்போ திருடியவர் சில மணிநேரத்தில் சிக்கினார்

 யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்பொருள் அங்காடிகளுக்குச் சென்று வெளிநாட்டு சொக்லேட்டுகள் மற்றும் சம்போக்களைத் திருடியவர் சில மணி நேரங்களிலேயே பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மாநகரில் உள்ள இரண்டு பல்பொருள் அங்காடிகளில் (Food City)இன்று காலை சம்பவம் இடம்பெற்ற நிலையில் சிசிரிவி காணொளிப் பதிவை வைத்து சந்தேக நபர் நண்பகல் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டார்.

அவர் இரண்டு பல்பொருள் அங்காடிகளுக்கு இன்று காலை சென்று தலா 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டுச் சொக்லேட்டுகள் மற்றும் சம்போக்களை திருடி ஆடைக்குள் மறைத்து வெளியேறியமை சிசிரிவி கமராவில் பதிவாகியிருந்தன.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டது.



Comments