Skip to main content

கைது செய்யப்பட்ட நபரின் வங்கி கணக்கில் பாரிய அளவான பணம்

 


சில மாதங்களுக்கு முன்னர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பில் வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் வங்கி கணக்கிற்கு டுபாயில் இருந்து பாரிய அளவான பணம் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பணத்தில் ஒரு தொகை இஸ்லாமிய அடிப்படைவாத குழுவிற்கு குறித்த நபர் வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த சந்தேக நபரை தீவிரவாத விசாரணை பிரிவிற்கு ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments