Skip to main content

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,956பேர் பாதிப்பு- 29பேர் உயிரிழப்பு!

 


கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் இரண்டாயிரத்து 956பேர் பாதிக்கப்பட்டதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து ஒன்பதாயிரத்து 157பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 463பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 31ஆயிரத்து 674பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 543பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 55ஆயிரத்து 020பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Comments